Gistak Media

India vs England T20 : டி20 உலகக் கோப்பை அரை இறுதியில் இந்தியா – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை.!

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று கொல்கத்தாவில் முதலாவது அரையிறுதி முடிந்த நிலையில், அதில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு (Final) முன்னேறியது. இதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது அரையிறுதியில் நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி, இங்​கிலாந்​துடன் பலப்பரீட்சை நடத்த (India vs England T20) உள்ளது. இந்த போட்டி இரவு 7 மணிக்கு மும்பை வான்​கடே மைதானத்​தில் நடை​பெறுகிறது. மேலும் இரண்டு அணிகளின் பலம் மற்றும் பலவீனம் குறித்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், இங்கிலாந்து அணியே இறுதிப்போட்டியில் விளையாடும் எனக் கணித்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி

கேப்டன் சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி லீக் சுற்​றில் விளையாடிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்ற நிலை​யில் சூப்​பர் 8 சுற்​றில் தென்னாப்பிரிக்கா​விடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து ஜிம்​பாப்​வே, வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அரை இறு​திக்​குள் (India vs England T20) நுழைந்​தது. மேலும் 2010, 2022-ம் ஆண்டு சாம்​பிய​னான இங்கிலாந்து அணி லீக் சுற்​றில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வி அடைந்த நிலை​யில் மற்ற 3 போட்டியிலும் வெற்​றிப்பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது.   இதனை தொடர்ந்து சூப்​பர் 8 சுற்​றில் இலங்​கை, பாகிஸ்​தான், நியூஸிலாந்து ஆகிய அணி​களை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

மீண்டும் எழுச்சி பெற்ற இந்திய அணி (India vs England T20)

சூப்​பர் 8 சுற்​றில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஏற்​பட்ட மோச​மான தோல்விக்கு​ பிறகு, இந்​திய அணி​யின் பேட்டிங் வரிசை​யில் பெரிய மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டன. டாப் ஆர்​டர் பேட்​டர்​கள் 3 பேரும்  இடதுகை வீரர்​களாக இருப்​பது இந்​திய அணிக்கு பெரிய பின்​னடைவை ஏற்​படுத்​திய நிலை​யில், தொடக்க ஆட்​டக்​கார​ராக சஞ்சு சாம்​சன் அணிக்கு (India vs England T20) கொண்​டு​வரப்​பட்​டார். இதன் மூலம் டாப் ஆர்​டரில் இருந்த வலது கை, இடது கை ​காம்பினேஷன் பிரச்​சனையும் முடிவுக்கு வந்தது. அதன் பின்​னர் மேற்கு இந்​தி​யத் தீவு​களுக்கு எதி​ரான போட்டியில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்​சன் கடைசி வரை களத்​தில் நின்று 97 ரன்​கள் விளாசி அணி​யின் வெற்​றிக்கு முக்கிய பங்காற்றினார்.

இந்திய அணிக்கு ஷேவாக் எச்சரிக்கை

”இங்கிலாந்து அணியை சுலபமாக ஜெயிக்கலாம்னு நினைக்காதீங்க” என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர ஷேவாக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ‘நமக்குச் சாதகமான சூழ்நிலை இருப்பதால் நாம் கட்டாயம் வெற்றி பெறுவோம் என்று அர்த்தம் கிடையாது. அதிலும் குறிப்பாக பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என மூன்று துறைகளிலும் நாம் மிகச் சிறப்பாகச் செயல்பட (India vs England T20) வேண்டும். போட்டி முடிந்த பிறகு, நாம் அப்படிச் செய்திருக்கலாமே, இப்படிச் செய்திருக்கலாமே என்ற பேச்சுகளுக்கெல்லாம் நாக் அவுட் போட்டிகளில் இடமே இல்லை’ என ஷேவாக் எச்சரித்துள்ளார்.

India vs England T20 - Gistakmedia

கடைசி 5 ஓவரில் கவனம் தேவை

நடப்பு டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்​திய அணி இறு​திக்​கட்ட ஓவர்களில் அதிக ரன்​களை விட்​டுக்​கொடுத்து வரு​கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்​டத்​தில் கடைசி 5 ஓவரில் மட்டும் இந்​திய அணி 75 ரன்கள் (India vs England T20) விட்டுக்கொடுத்தது. இதனால் இந்த இறு​திக்​கட்ட ஓவர்​களில் இந்​திய அணி கூடு​தல் கவனத்​துட​னும், புத்​தி​சாலித்​தனத்​துட​னும் செயல்பட வேண்​டியது அவசியம்.

3-வது முறையாக

டி20 உலகக் கோப்பை வரலாற்​றில் தொடர்ந்து 3-வது முறை​யாக இந்​தியா – இங்​கிலாந்து அணி​கள் அரை இறுதி போட்டியில் பலப்​பரீட்சை நடத்த உள்​ளன. இதில் கடந்த 2022 மற்றும் 2024-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்​களி​லும் இரு அணிகளும் அரை இறு​தி​யில் மோதி இருந்​தன. இதில் 2022-ல் இங்​கிலாந்து அணி​யும், 2024-ல் இந்​திய அணி​யும் வெற்றி பெற்றுள்ளன.

ஆடுகளம் எப்படி?

மும்பை வான்கடே மைதானம் எப்போதும் பேட்​ஸ்​மேன்களுக்​குச் சாதக​மாகவே இருக்​கும். மைதானத்​தின் எல்​லைக்​கோடு​கள் அளவில் சிறியது என்​ப​தால் சிக்​ஸர் மழைக்கு வாய்ப்​புள்​ளது. எனினும், மேலும் போட்டியின் தொடக்​கத்​தில் பந்துகள் நன்கு ‘ஸ்​விங்’ ஆகும். இதை வேகப்​பந்து வீச்சாளர்​கள் பயன்​படுத்​திக் (India vs England T20) கொள்​ளக்​கூடும். பனிப்பொழிவை கருத்​தில் கொண்டு டாஸ் வெல்​லும் அணி முதலில் பந்​து​வீச்​சைத் தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top