Gistak Media

India vs New Zealand T20 : டி20 உலகக் கோப்பை.. இந்தியா- நியூசிலாந்து பலப்பரீட்சை! சாதனை படைக்குமா இந்திய அணி?

10-வது ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை (India vs New Zealand T20) நடத்துகின்றன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. கடந்த 2023-ம் ஆண்டில் இதே மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் ஒருநாள் உலகக் கோப்பையை இழந்த இந்திய அணி, தற்போது டி20 உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றால் இரண்டு புதிய வரலாற்று சாதனையை படைக்கும். ஒன்று, டி20 உலகக் கோப்பையைத் தொடர்ந்து 2 முறை வென்ற முதல் நாடு. மற்றொன்று, சொந்த மண்ணில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு சேரும். மேலும் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினால் 3-வது முறையாக மகுடம் சூடிய முதல் அணி என்ற பெருமையையும் பெறும். ஏனெனில் இதுவரை எந்த அணியும் 3 முறை டி20 உலகக் கோப்பையை வென்றது இல்லை.

இந்தியா - நியூசிலாந்து நேருக்கு நேர் (India vs New Zealand T20)

டி20 உலகக் கோப்பை போட்டிகளில் நியூசிலாந்து அணியை இதுவரை வென்றதே இல்லை என்ற அவப்பெயர் இந்திய அணிக்கு இருக்கிறது. அதேசமயத்தில் நியூசிலாந்து அணி வென்றுள்ள 2 ஐசிசி கோப்பைகளும் இந்தியாவிற்கு எதிராகவே கிடைத்துள்ளன. ஆனால், நேருக்கு நேர் மோதிய 30 போட்டிகளில் இந்திய அணி 18 முறை வென்று ஆதிக்கம் (India vs New Zealand T20) செலுத்தியிருக்கிறது. ஐசிசி தொடரின் நாக் அவுட் போட்டிகளில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இந்தியா 2 முறையும், நியூசிலாந்து அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் கடைசியாக நடந்த 2 நாக் அவுட் போட்டியிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. மேலும், நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா விளையாடிய 10 போட்டிகளில் 7-ல் வென்றுள்ளது. நியூசிலாந்து அணி விளையாடிய 2 போட்டிகளிலும் தோற்றுள்ளது.

India vs New Zealand T20 - Gistakmedia

4-வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணி

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 4-வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. இதில், 2007 மற்றும் 2024-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள (India vs New Zealand T20) இந்திய அணி 2014-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் இலங்கை அணியிடம் தோல்வி அடைந்தது. அதேசமயத்தில் நியூசிலாந்து அணி 2-வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாட உள்ளது. அந்த அணி கடந்த 2021-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்தது.

ஆடுகளம் எப்படி?

டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ள நரேந்திர மோடி மைதானம் நடப்பு தொடரில் ஒரே ஒரு போட்டிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆடுகளம் மும்பை வான்கடேவில் (India vs New Zealand T20) நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் போன்றே பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top