India Vs Sri Lanka Asia Cup : ஆசிய கோப்பை.. சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி..!
ஆசிய கோப்பையின் சூப்பர் 4 போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதிய போட்டி சமனில் முடிந்த நிலையில் சூப்பர் ஓவரில் இந்திய அணி த்ரில் (India Vs Sri Lanka Asia Cup) வெற்றி பெற்றது. 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் முன்னேறிய நிலையில், இதில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளன.
பதும் நிசாங்காவின் சதம் வீண்
நேற்று துபாயில் நடைபெற்ற சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 22 பந்தில் அரைசதமடித்து அசத்தினார். பிறகு களத்திற்கு வந்த சஞ்சு சாம்சன் 39 ரன்களும், திலக் வர்மா 49 ரன்களும் அடிக்க இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 202 ரன்கள் சேர்த்தது.
203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய பதும் நிசாங்கா இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 58 பந்துகளில் 7 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 107 ரன்கள் அடித்து அசத்தினார். கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவை என்ற நிலையில், தசுன் ஷனகா அடித்த பந்து லாங்க் ஆன் பீல்டரிடம் சென்றது. ஆனால் ஃபீல்டர் அந்த பந்தை மிஸ் செய்ததை கவனிக்காத தசுன் ஷனகா 2 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் (India Vs Sri Lanka Asia Cup) இலங்கை அணியும் 202 ரன்கள் அடிக்க போட்டி சமன்செய்யப்பட்டு முடிவு சூப்பர் ஓவரை நோக்கி சென்றது.
இந்தியா த்ரில் வெற்றி (India Vs Sri Lanka Asia Cup)
இதனைத்தொடர்ந்து சூப்பர் ஓவர் முறைப்படி இரண்டு அணிகளுக்கும் தலா 1 ஓவர் வழங்கப்பட்டது. சூப்பர் ஓவரில் அதிக அனுபவம் பெற்றவரான அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்து வீசி இரண்டு விக்கெட் வீழ்த்தி வெறும் 2 ரன்களை மட்டுமே கொடுத்தார். 3 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் முதல் பந்திலேயே இலக்கை எட்டி வெற்றியை தேடித்தந்தார். இதன் மூலம் இந்திய அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும் பல ட்விஸ்ட்டுடன் நடந்த இந்த போட்டி நடப்பு ஆசியக்கோப்பையில் சிறந்த போட்டியாக அமைந்தது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!