Gistak Media

India Vs West Indies 1st T20: இந்திய அணியில் இருக்கும் பெரிய மைனஸ்...

India Vs West Indies 1st T20 - இந்திய அணி தோல்வி :

India Vs West Indies 1st T20 போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இது பலரையும் ஆச்சரியத்தில் என்னதான் இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இல்லையென்றாலும் இளம் வீரர்களை நம்பி களமிறங்கியது. ஆனால் பாண்டியா மற்றும் சூரிய குமார் யாதவ் போன்ற முன்னணி வீரர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து விளையாடாததால் தோல்வியடைந்தது. முக்கியமாக சொல்லப்போனால் ஐபிஎல் தொடரில் கலக்கிய கில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கொஞ்சம் கூட விளையாடவில்லை.

உலகக் கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில் அவரது பார்ம் மோசமாக இருந்து வருகிறது. ஒரு நாள் தொடரிலேயே இசன் கிஷான் தவிர எவரும் சோபிக்கவில்லை. இதே மாதிரி சென்றால் இந்திய அணி உலக கோப்பையில் கண்டிப்பாக அரையிறுதி கூட செல்லாது. உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டிகளிலேயே தோல்வி அடைந்து வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் நம் இந்திய அணி தோற்று இருப்பது மிகவும் மோசமான ஒன்றாகும்.

நேற்று விளையாடிய போட்டியில் இந்திய அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 149 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. வெறும் 150 ரன்கள் என்ற எளிய இலக்கு எதிர் கொண்டு விளையாடிய இந்திய அணி அதைக்கூட அடிக்காமல் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய கில் மற்றும் கிஷான் சொற்ப ரன்களில் வெளியேறினர். அறிமுக வீரராக களம் இறங்கிய திலக் வர்மா சற்று நேரம் அதிரடி காட்டிய போதும் ரன்கள் போதுமானதாக இல்லை. அவர் சீக்கிரம் அவுட் ஆகி ஏமாற்றினார். அடுத்த ஓவர்களில் சாம்சன் மற்றும் கேப்டன் பாண்டியா ஆட்டம் இழந்தனர். இதனால் இந்திய அணி தோல்வி அடைந்தது.

கடைசியாக களமிறங்கும் போது ஷர்துல் மற்றும் தீபக் சாகர் ஆகிய பவுலிங் ஆல் ரவுண்டர்கள் இருந்திருந்தால் எளிதாக சேஸ் செய்திருக்கலாம். மாறாக வெறும் பவுலர்களையே வைத்து கடைசி நேரங்களில் சேஸ் செய்ய முடியாது. இந்தியாவில் அதுபோன்ற ஆல் ரவுண்டர்கள் அதிகமாக இல்லை. ஜடேஜா ஏழாவது வீரராக களம் இறங்கினால் அவருக்குப் பிறகு மூன்று வேக பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழல் பந்துவீச்சாளர் களமிறங்க முடியும். அந்த அளவில் இருந்தால் இந்திய அணி மிகப்பெரிய இலக்கை சேஸ் செய்வது கடினமாகும். இதனால் அணியில் ஷர்துல் போன்ற ஆல் ரவுண்டர்களை சேர்க்கலாம். ஆனால் அப்படி அவர் இடம் பெற்றால் சமி அல்லது சிராஜ் ஆகியோருக்கு இடம் கிடைக்காமல் ஆகிவிடும். இதனால் இந்த இடத்தில் யாரை இறக்குவது என இந்திய அணி தடுமாறிக் கொண்டிருக்கிறது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top