Gistak Media

India Won 9th Asia Cup : ஆசியக் கோப்பை.. பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 9வது முறையாக சாம்பியன்.!

ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி 9வது முறையாக இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால், பாகிஸ்தான் (India Won 9th Asia Cup) கிரிக்கெட் வாரியத் தலைவரிடம் இருந்து வெற்றிக் கோப்பையை பெற இந்திய வீரர்கள் மறுப்பு தெரிவித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 8 அணிகள் பங்கேற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் கடையில் இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. அதிலும், 41 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் நேற்று களம் கண்டன.

பாகிஸ்தான் முதலில் பேட்டிங்

இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக சாஹிப்ஸாதா ஃபர்ஹான் மற்றும் பஹர் ஸமான் களமிறங்கினர். இருவரும் பாகிஸ்தான் அணிக்கு சிறப்பான (India Won 9th Asia Cup) அடித்தளத்தை அமைத்து கொடுத்த நிலையில், ஆட்டத்தின் 10வது ஒவரில் வருண் சக்கரவர்த்தி வீசிய முதல் பந்தில் சாஹிப்ஸாதா ஃபர்ஹான் 38 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன் பிறகு களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்களால் இந்திய பந்து வீச்சை சமாளிக்கமுடியாமல் தொடர்ச்சியாக வெளியேறினர். தொடர்ந்து சயிம் அயூப் 14, பஹீம் அஷ்ரப் 0, முகமது ஹாரிஸ் 0, ஸமான் 46, ஹுசைன் தலாத் 1, கேப்டன் சல்மான் அலி ஆகா 8, ஷாஹீன் ஷா அப்ரிடி 0, ஹாரிஸ் ரவூஃப் 6, முகமது நவாஸ் 6 ரன் என பாகிஸ்தான் வீரர்கள் சொற்ப ரன்னில் அடுத்தடுத்து வெளியேறிய நிலையில் 19.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4, வருண் சக்ரவர்த்தி 2, அக்சர் படேல் 2, பும்ரா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இந்திய அணிக்கு 147 ரன்கள் இலக்கு (India Won 9th Asia Cup)

India Won 9th Asia Cup - Gistakmedia

147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இலங்கை எதிரான ஆட்டத்தில் அரைசதம் விளாசியா அபிஷேக் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தார். மறுமுனையில் ஆடிய ஷுப்மன் கில்லும் 12 ரன்களுடன் வெளியேறிய நிலையில், கேப்டன் சூர்யகுமார் (India Won 9th Asia Cup) ஒரே ரன்னில் ஆட்டமிழந்து நடையை கட்டினார். மறுமுனையில் இறங்கிய திலக் வர்மா இந்திய அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தி கடைசி வரை போராடி இந்திய அணியை வெற்றிப்பெற செய்தார்.

இந்தியா 9வது முறையாக சாம்பியன்

இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றதுடன் 9வது முறையாக சாம்பியன் கோப்பையை வென்றுள்ளது. ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றதையடுத்து, இந்தியா முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது. இந்த 2025 ஆசியக் கோப்பை தொடரில் அனைத்து போட்டிகளிலும் வென்ற இந்திய அணி, பாகிஸ்தான் அணியை மட்டும் 3 முறை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top