Gistak Media

Indian Bank SO Recruitment 2026 : இந்தியன் வங்கியில் 350 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் ?

இந்தியன் வங்கி ஆனது சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வரும் ஒரு முன்னணி பொதுத்துறை வங்கி ஆகும். இந்த பொதுத்துறை வங்கியில் 350 சிறப்பு அதிகாரி (Specialist Officer – SO) பணியிட தேர்வுக்கான 2026-ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு (Indian Bank SO Recruitment 2026) அறிவிப்பு ஆனது வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் விரிவாக கீழே வழங்கப்பட்டுள்ளன

விண்ணப்பிக்க தேவையான கல்வித் தகுதிகள்

1. தகவல் தொழில்நுட்பத் துறை பணிகள்

இந்த தகவல் தொழில்நுட்பத் துறையில் Manager – DC Operations, Info Security, DBA, Network Operations, Application Developer, API Developer, மற்றும் Data Analyst பதவிகளுக்கு பின்வரும் கல்வித் தகுதிகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

● கல்வித் தகுதி விவரங்கள்

(Indian Bank SO Recruitment 2026) விண்ணப்பதாரர்கள் கணினி அறிவியல் (CS), தகவல் தொழில்நுட்பம் (IT), மற்றும்  மின்னணுவியல் (Electronics) துறையில் 4 ஆண்டு B.E / B.Tech பட்டம் பெற்றவர்களாக    அல்லது தொடர்புடைய முதுகலைப் பட்டம் (MCA/M.Sc) அல்லது NIELIT ‘B’ நிலையில்  தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

இதில் உள்ள குறிப்பிட்ட பணிகளுக்கு VMware, CISSP, CISA, CCNA, மற்றும் Oracle Certified Associate போன்ற சான்றிதழ்கள் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும்.

2. நிதி மற்றும் கணக்கியல் துறை பணிகள்

நிதி மற்றும் கணக்கியல் துறையில் மேலாளர் (Chartered Accountant) பணிக்கு  விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ICAI அமைப்பில் பட்டயக் கணக்காளர் (CA) முடித்திருக்க வேண்டும்.

நிதி மற்றும் கணக்கியல் துறையில் நிதி ஆய்வாளர் (Financial Analyst) பணிக்கு  விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் CA/ICWA/CFA தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

3. கடன் மற்றும் அபாய மேலாண்மை துறை பணிகள்

கடன் மற்றும் அபாய மேலாண்மை துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் நிதித் துறையில் MBA (MBA Finance) அல்லது CA/CFA முடித்தவர்களாக இருக்க வேண்டும்.  மேலும் அவர்கள்  கடன் பகுப்பாய்வு (Credit Analysis) அல்லது அபாய மேலாண்மை (Risk Management) துறையில் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

4. இதர சிறப்புப் பதவி பணிகள்

Wealth Management பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் MBA பட்டத்துடன் NISM மற்றும் IRDAI சான்றிதழ்கள் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

HR & Marketing பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மனிதவள மேம்பாடு (HR) அல்லது சந்தைப்படுத்துதல் (Marketing) துறையில் MBA/PGDM முடித்தவர்களாக இருக்க வேண்டும்.

பொறியாளர்கள் (Engineers) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சிவில் இன்ஜினியரிங் (B.Tech Civil) அல்லது கட்டிடக்கலை (B.Arch) முடித்தவர்களாக இருக்க வேண்டும்.

பாதுகாப்பு அதிகாரி (Security Officer) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், ராணுவம் அல்லது காவல்துறையில் 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம்  பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

Indian Bank SO Recruitment 2026 - GISTAK media

வயது வரம்பு பற்றிய விவரங்கள்

  • Scale I (Assistant Manager) பதவிக்கு 22 – 32/34 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Scale II (Manager) பதவிக்கு 23 – 33/35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Scale III (Senior Manager) பதவிக்கு 25 – 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு அதிகபட்சமாக 45 வயது வரை உள்ளவர்கள் (Indian Bank SO Recruitment 2026) விண்ணப்பிக்கலாம்.

வயது தளர்வுகள் பற்றிய விவரங்கள்

  • SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரை தளர்வு உண்டு.
  • OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரை தளர்வு உண்டு.
  • மாற்றுத்திறனாளிகள் (PwBD) பிரிவினருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை தளர்வு உண்டு.
  • முன்னாள் ராணுவத்தினர் பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரை தளர்வு உண்டு.

Indian Bank SO Recruitment 2026 : தேர்ந்தெடுக்கும் முறை

விண்ணப்பங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து தேர்ந்தெடுக்கும் முறை பின்பற்றப்படும்.

1. நேர்முகத் தேர்வு முறை

வங்கி தகுதியான விண்ணப்பதாரர்களை மட்டுமே அழைத்து நேர்முகத் தேர்வு நடத்தலாம்.

2. எழுத்துத் தேர்வு முறை மற்றும் நேர்முகத் தேர்வு முறை

 அதிக விண்ணப்பங்கள் பெறும் பட்சத்தில் வங்கி ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்தி, அதில் வெற்றி பெறுபவர்களை மட்டுமே அழைத்து நேர்முகத் தேர்வு நடத்தலாம்.

ஊதிய விவரங்கள்

  • Assistant Manager (Scale I) பதவிக்கு அடிப்படை ஊதியம் Rs.48,480 ஆகும். Assistant Manager (Scale I) பதவிக்கு மொத்தச் சம்பளம் Rs.70,000 முதல் Rs.85,000 வரை வழங்கப்படும்.
  • Manager (Scale II) பதவிக்கு அடிப்படை ஊதியம் Rs.64,820. Manager (Scale II) பதவிக்கு மொத்தச் சம்பளம் Rs.85,000 முதல் Rs.1,10,000 வரை இருக்கலாம்.
  • Senior Manager (Scale III) பதவிக்கு அடிப்படை ஊதியம் 85,920. Senior Manager (Scale III) பதவிக்கு மொத்தச் சம்பளம் Rs.1.4 லட்சம் வரை உயரலாம்.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை விவரங்கள்

  • SC / ST / PwBD விண்ணப்பதாரர்கள் Application Fee Rs.175 செலுத்த வேண்டும்.
  • இதர General / OBC / EWS விண்ணப்பதாரர்கள் Application Fee Rs.850 முதல் Rs.1000 வரை (GST உட்பட) செலுத்த வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.indianbank.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் “Careers” பகுதிக்குச் சென்று ஆன்லைன் மூலம் ஏப்ரல் 28-ஆம் தேதிக்குள் (Indian Bank SO Recruitment 2026) விண்ணப்பிக்க வேண்டும்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top