Indian Cinema Age: 110 வது வயதில் அடியெடுத்து வைக்கும் இந்திய சினிமா
இன்றைய மக்களின் முக்கிய பொழுதுபோக்காக விளங்குவது சினிமா ஆகும். இதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் சினிமா என்ற கலையை ரசித்து வருகின்றனர். சினிமா லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட இந்திய சினிமாவுக்கு இன்று 110 வது வயது ஆகும்.
இந்தியாவில் முதல் சினிமா
1913 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் ஊமைத் திரைப்படமான “ராஜா ஹரிச்சந்திரா” இது1913 ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதி பம்பாயில் உள்ள காரோனேஷன் திரையரங்கில் திரையிடப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் முழுநீளத் திரைப்படம் இதுவாகும். பண்டைய காலத்தில் இந்தியாவை ஆண்ட மன்னன் ‘ஹரிச்சந்திராவின்’ கதையை சொல்லும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டது
இந்திய சினிமா சகாப்தத்தின் 109 ஆண்டுகளை நிறைவு செய்து 110ல் ஆடி எடுத்து வைக்கிறது. இன்று முழுநீளத் திரைப்படமான “ராஜா ஹரிச்சந்திரா” வெளியான நாள் 3 மே 1913 அன்று கருப்பு மற்றும் வெள்ளையில் ஒரு புராணக்கதையாக இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாயாஜால ஆச்சரியமே இந்த முதல் திரைப்படமாகும்.
மக்களின் மனநிலை
ராஜா ஹரிச்சந்திரா படத்தை முதன்முதலில் வெள்ளைத் திரையில் பார்க்கும் போது நாடகங்களை மட்டுமே பார்த்துப் பழகிக் கொண்டிருந்த இந்திய மக்களின் மனநிலை என்ன? அளவிட முடியாத ஆச்சரியங்கள் நிறைந்ததாக இருக்கலாம். இன்டர்நெட், செல்போன், மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள், நவீன சவுண்ட் சிஸ்டம் என அறிவியலின் உச்சகட்ட இன்பங்களை நாம் அனைவரும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் அதையெல்லாம் மறந்துவிட்டு 1913-ல் மக்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று சிந்திப்போம். முதல் படத்தை திரையில் பார்த்த அனுபவம் அவர்களுக்கு நம்பமுடியாத ஆச்சரியமாகும். திரையில் நடிக்கும் நடிகர்களைப் பார்த்தாலே, ஓடும் காட்சியில் திரையைக் கிழித்து நம் மேல் விழுந்துவிடுவார்களோ என்று அஞ்சியிருப்பார்கள்.
படத்தில் தீ தொடர்பான காட்சிகள் இருந்தால் பயத்துடனும் அதிர்ச்சியுடனும் பார்த்திருப்பார்கள். வீடியோவிற்கான தனி ரீல் பெட்டிகள் மற்றும் ஒலிக்கான தனி அம்ப்ளிஃலிபயர் என்று அனைத்துமே வித்யாசமாகதானே தெரிந்திருக்கும். இன்றைய தலைமுறை பார்த்திராத சினிமாவின் அறிமுகம் அது.
கதையின் மைய கருத்து
ஆரம்ப காலத்தில் வெளியான படங்கள் கலாச்சாரம் மற்றும் கலாச்சாரம் சார்ந்து மக்களின் மனநிலையை அடிப்படையாக கொண்டவை. அதாவது புராணங்கள் மற்றும் இதிகாசங்களை அடிப்படையாகக் கொண்ட நாடக பாணியிலான திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன. நாடகத் தாக்கங்கள் நிறைந்த காலகட்டத்தில் வெளிவந்த “ராஜா ஹரிச்சந்திரா” படமும் புராணத்திலிருந்து எடுக்கப்பட்ட கதையைக் கொண்டிருந்தது.
நீதி நேர்மை தவறாக மன்னராக தன்னுடைய ராஜ்யத்தைத் துறந்து தன் மனைவி மற்றும் மகனுடன் சென்று அந்த ராஜ்யம் முனிவர் ஸ்வாமிமிதரருக்கு இனி ராஜ்யம் ஏற்பதில்லை என்று சத்தியம் செய்துகொடுப்பது போன்றதொரு கதைகளுமே இந்த திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை எடுத்து முடிக்க 7 மாதங்கள் 21 நாட்கள் ஆனது. ‘ராஜா ஹரிச்சந்திரா’ திரைப்படத்தின் வெற்றி பால்கேவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. இதனை தொடர்ந்து பல படங்களை இயக்கவும் வழி கட்டியாக அமைந்தது. பால்கேவுக்கு மட்டுமல்லாமல், இந்திய சினிமா இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்து உலக சினிமா தரத்திற்கு செல்ல இப்படமே ஆதாரமாகும்.








