Gistak Media

Indian Navy Agniveer Recruitment : இந்திய கடற்படையில் 1200 அக்னிவீர்பணியிடங்கள்.. உடனேவிண்ணப்பிங்க.!

நாட்டின் எல்லைகளைக் காக்கும் இந்திய கடற்படை ஆனது (Indian Navy Agniveer Recruitment) அக்னிபத் திட்டத்தின் கீழ் 2026-27 பேட்ச்சில் அக்னிவீர் (SSR), அக்னிவீர் (MR) மற்றும் அக்னிவீர் (SSR Medical Assistant) ஆகிய பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடற்படையின் இணையதளத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது வெளியிடப்பட்டுள்ளது. அரசு வேலையில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு ஆகும். கடற்படையில் சேர விரும்பும் தகுதியுள்ள இளைஞர்கள் தங்களது விண்ணப்பங்களை வரும் மார்ச் 14 முதல் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கலாம்.

Indian Navy Agniveer (SSR / MR) திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அழைப்பு

பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை – 1200

கல்வித் தகுதிகள் மற்றும் வயது வரம்பு விவரங்கள்

ஒவ்வொரு பணிக்கான கல்வித் தகுதிகள்  மற்றும் வயது வரம்பு விவரங்கள் தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

  • அக்னிவீர் SSR பணி

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலைங்களில் ஏதாவது ஒன்றில் 50% மதிப்பெண்களுடன் 12 ஆம் வகுப்பில் (கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • அக்னிவீர் MR பணி

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலைங்களில் ஏதாவது ஒன்றில் 50% மதிப்பெண்களுடன் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

  • அக்னிவீர் SSR (Medical Assistant) பணி

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலைங்களில் ஏதாவது ஒன்றில் 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (PCB) பாடங்களுடன் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரங்கள் (Indian Navy Agniveer Recruitment)

  • 01/2027 பேட்சிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 1 டிசம்பர் 2004 முதல் 31 மே 2009-க்குள் பிறந்திருக்க வேண்டும்.
  • 02/2027 பேட்சிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01 மே 2005 முதல் 31 அக்டோபர் 2009-க்குள் பிறந்திருக்க வேண்டும்.
Indian Navy Agniveer Recruitment - Gistakmedia

சம்பள விவரங்கள்

  • அக்னிவீர் MR பணிக்கான மாத சம்பளம் ரூ.40,000 ஆகும்
  • அக்னிவீர் SSR பணிக்கான மாத சம்பளம் ரூ.40,000 ஆகும்.
  • அக்னிவீர் SSR (Medical Assistant) பணிக்கான மாத சம்பளம் ரூ.21,000 முதல் ரூ.69,100 ஆகும்.

தேர்வு முறை

கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு மற்றும் உடல் தகுதித் தேர்வுகள் நடைபெறும். எழுத்துத் தேர்வு ஆனது 180 மையங்களில் மே 2026-ல் (Indian Navy Agniveer Recruitment) நடைபெறும். அதன் முடிவுகள் ஆனது ஜூன் 2026-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் விண்ணப்பிக்க கடைசித் தேதி

விண்ணப்பதாரர்கள் அனைவரும் Rs.550 + 18% ஜிஎஸ்டி (மொத்தம் Rs.649) விண்ணப்பக்கட்டணமாகச் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க (Indian Navy Agniveer Recruitment) மார்ச் 14 முதல் ஏப்ரல் 6, 2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் joinindiannavy.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top