Indian Overseas Bank Recruitment 2024 : 550 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக விளங்கும் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் (Indian Overseas Bank Recruitment 2024) காலிப்பணியிடங்கள் ஐபிபிஎஸ் மூலம் நேரடியாக நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 550 பயிற்சி பணியிடங்களை (Apprentices) நிரப்புவதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? போன்ற விவரங்களை பார்க்கலாம்.
Indian Overseas Bank Recruitment 2024 :
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மொத்தம் 550 பயிற்சி (Apprentices) பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மேலும் இந்த அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைகளுக்கு மட்டும் 130 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- கல்வித் தகுதி (Educational Qualification) : இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இந்த பயிற்சி (Apprentices) பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 1.04.2020 – 01.08.2024-க்குள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பு (UG) முடித்திருக்க வேண்டும்.
- வயதுத் தகுதி (Age) : இந்த பயிற்சி (Apprentices) பணியிடங்களுக்கு 21 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் மத்திய அரசு விதிகளின் படி SC /ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சம்பளம் (Salary) : இந்த பயிற்சி (Apprentices) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் ஊதியத்துடன் ஓராண்டு காலம் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுவார்கள் எனவும் பிறகு நிரந்தர பணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த பயிற்சி (Apprentices) பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் உள்ளூர் மொழித்திறன் தேர்வு இவற்றின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்த பயிற்சி (Apprentices) பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர்/ஒபிசி/பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு ரூ.944 ஆகவும், பெண்கள் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு ரூ.708 ஆகவும், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.472 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த பயிற்சி (Apprentices) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://bfsissc.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பிக்க கடைசித் தேதி (Application Last Date) : இந்த பயிற்சி (Apprentices) பணியிடங்களுக்கு (Indian Overseas Bank Recruitment 2024) விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 10.09.2024 ஆகும். ஆன்லைன் தேர்வானது 22.09.2024 நடைபெறும் எனவும் மேலும் தேர்வு நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் விவரங்கள் அறிய :
https://www.iob.in/upload/CEDocuments/iobApprentices_Web_Ad_Final_28082024.pdf என்ற அறிவிப்பினை பார்வையிடவும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!