Indian Railway Clerk Notification 2024 : 3445 கிளார்க் காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்தியன் இரயில்வேயில் காலியாக இருக்கும் (Indian Railway Clerk Notification 2024) கமெர்சியல் கம் டிக்கெட் கிளார்க், பயிற்சி கிளார்க், ஜூனியர் கிளார்க் மற்றும் அக்கவுண்ட் கிளார்க் கம் டைப்பிஸ்ட் ஆகிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடங்கள் இரயில்வேயில் முதல்முறையாக நிரப்பப்பட உள்ளது.
Indian Railway Clerk Notification 2024 :
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : இந்தியன் இரயில்வேயில் காலியாக உள்ள கமெர்சியல் கம் டிக்கெட் கிளார்க் (Commercial Cum Ticket Clerk) பணியிடங்களுக்கு 2022 காலிப்பணியிடங்களும், பயிற்சி கிளார்க் (Practice Clerk), ஜூனியர் கிளார்க் (Junior Clerk) மற்றும் அக்கவுண்ட் கிளார்க் கம் டைப்பிஸ்ட் (Account Clerk Cum Typist) போன்ற பணியிடங்களுக்கு 1423 காலிப்பணியிடங்களையும் சேர்த்து மொத்தம் 3445 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- கல்வித் தகுதி (Educational Qualification) : இரயில்வேயில் இந்த கிளார்க் (Clerk) பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு (UG) முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வயது தகுதி (Age) : இந்த கிளார்க் (Clerk) பணியிடங்களுக்கு 18 வயது முதல் 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் கொரோனா காலம் காரணமாக அனைத்து பிரிவினருக்கும் 3 ஆண்டுகள் வரை வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சம்பளம் (Salary) : இந்த கிளார்க் (Clerk) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.19900/- முதல் 21700/- வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த கிளார்க் (Clerk) பணியிடங்களுக்கு 2 நிலைகளில் தேர்வு (Indian Railway Clerk Notification 2024) நடைபெறுகிறது. முதல் நிலை கணினி வழித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இரண்டாம் நிலை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த இரண்டாம் நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணலுக்கு (Interview) அழைக்கப்பட்டு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.rrbapply.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பிக்க கடைசித் தேதி (Application Last Date) : இந்த கிளார்க் (Clerk) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 20.10.2024 ஆகும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!