Gistak Media

Indian Under 19 Team Captain Ayush Mathre : இந்திய அண்டர் 19 அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே அறிவிக்கப்பட்டுள்ளார்

5 ஒரு நாள் போட்டி தொடர் மற்றும் இரண்டு நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இந்திய அண்டர் 19 அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. தற்போது இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்று வீரராக இடம் பிடித்து சிறப்பாக விளையாடி வரும் ஆயுஷ் மாத்ரே இந்திய அண்டர் 19 அணியின் (Indian Under 19 Team Captain Ayush Mathre) கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷிக்கு அணியில் இடம்

ஜூன் மாதம் ஒரு நாள் தொடரும், ஜூலை மாதம் டெஸ்ட் தொடரும் நடைபெறும் என்று பிசிசிஐ  அறிவித்துள்ளது. இந்த தொடரில் 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்சி-யும் இடம் பிடித்துள்ளார். மேலும் இந்திய அண்டர் 19 அணியின் துணை கேப்டனாக மும்பையைச் சேர்ந்த அபிக்யான் குண்டு அறிவிக்கப்பட்டிருக்கிறார். மேலும் ராஜஸ்தான் அணியில் சூரியவன்சியுடன் தொடக்க வீரராக விளையாடி வரும் விஹான் மல்கோத்ராவுக்கும் இந்த இரண்டு தொடரிலும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அண்டர் 19 உலகக் கோப்பை தொடர் (Indian Under 19 Team Captain Ayush Mathre)

வரும் 2026-ம் ஆண்டு அண்டர் 19 உலகக் கோப்பைத் தொடரானது ஜிம்பாப்பேவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அண்டர் 19 அணி தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இரண்டு வீரர்கள் தற்போது இந்திய அண்டர் 19 அணியில் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Indian Under 19 Team Captain Ayush Mathre - Gistakmedia

இந்திய அண்டர் 19 அணியின் வீரர்கள் விவரம்

ஆயுஷ் மாத்ரே (கேப்டன்), விஹான் மால்ஹோத்ரா, வைபவ் சூர்யவன்ஷி, மவுல்யராஜ் சிங், ராகுல் குமார், அபிக்யான் குண்டு (விக்கெட் கீப்பர்), ஆர்.எஸ்.அம்ப்ரிஷ், கனிஷ் சவ்ஹான், கிலன் பட்டேல், ஹெனில் பட்டேல், பிரணவ் ராகவேந்திரா, முகமது இனான், ஆதித்ய ராணா, ஹர்வன்ஸ் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் யுதாஜித் குகா மற்றும் சுழற்பந்துவீச்சாளர் அன்மோல்ஜித் சிங் ஆகியோர் இந்திய அண்டர் 19 அணியில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top