India's Economic Growth: நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.6 சதவீதம் வளரும்... சர்வதேச நிதியம் கணிப்பு...!
நடப்பு நிதியாண்டில் இந்தியவின் பொருளாதாரம் 6.6 சதவீதம் வளர்ச்சி அடையும் என சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) கணித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா பல மடங்கு வரி விதித்து அதில் சில நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்தது. இதனால் உலகளவில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் சூழலில், உலக பொருளாதார முன்னோட்டம் குறித்த அறிக்கையை, சர்வதேச நிதியம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, 2025-26-ம் நிதியாண்டில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து இருக்கும். மேலும் இந்தியாவின் பொருளாதாரம் 6.6 என்ற சதவீதத்தில் (India’s Economic Growth) வளர்ந்து வருகிறது. ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பொருளாதாரத்தில் சிறப்பான செயல்பாடு காரணமாக இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரிவிதிப்பின் பாதிப்புகளை ஈடுசெய்துள்ளது.
சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்திய பொருளாதாரம் (India's Economic Growth)
அதேபோல் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஏற்பட்ட வேகம் சற்று குறைவதற்கான சாத்தியங்கள் உள்ளதால் வரும் 2026-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதமாக இருக்கும். மேலும் இந்த நிதியாண்டில் உலகளவிலான பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதமாக இருக்கும் எனவும் இது அடுத்த நிதியாண்டில் 3.1 சதவீதமாக குறையும். அதேபோல் வளர்ந்த பொருளாதார நாடுகளில் வளர்ச்சி வீதம் 1.6 சதவீதமாக இருக்கும். வளர்ந்து வரும் (India’s Economic Growth) பொருளாதார நாடுகளின் வளர்ச்சி 4.2 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
வளர்ந்த பொருளாதார நாடுகளில் வேகமாக வளரும் நாடாக ஸ்பெயின் இருக்கும். இதன் வளர்ச்சி வீதம் 2.9 சதவீதமாக இருக்கும். மேலும் நடப்பு ஆண்டில் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 1.9 சதவீதமாக இருக்கும். இது கடந்தாண்டில் 2.4 சதவீதமாக இருந்தது. பிரேசில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் 2.4 சதவீதமாகவும், கனடாவின் பொருளாதார வளர்ச்சி 1.2 சதவீதமாகவும், ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி 1.1 சதவீதமாகவும் இருக்கும் எனவும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக இருந்தாலும், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியானது அடுத்த (India’s Economic Growth) நிதியாண்டில் 3.3 சதவீதத்திலிருந்து, 2.6 சதவீதமாக குறையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!