India's First Ever Gold At Speed Skating : உலக ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் முதல் தங்கம் வென்றார் தமிழக வீரர் ஆனந்தகுமார்
சீனாவில் நடைபெற்ற உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கத்தை தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர் ஆனந்தகுமார் வேல்குமார் (India’s First Ever Gold At Speed Skating) வென்று கொடுத்துள்ளார். இந்த சிறப்புமிக்க வெற்றியின் மூலம், ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற ‘முதல் இந்தியர்’ என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இந்தியாவிற்கு முதல் தங்கம்
சீனாவின் பெய்டைஹே நகரில் நடைபெற்ற இந்த உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் தொடரில், நேற்று (15.09.2025) இரவு நடந்த சீனியர் ஆண்களுக்கான 1,000 மீட்டர் ஸ்பிரின்ட் பந்தயத்தில், 22 வயதான ஆனந்தகுமார் 1:24.924 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். இந்த வெற்றியின் மூலம், ஸ்பீடு ஸ்கேட்டிங் விளையாட்டில் ‘உலக சாம்பியன் பட்டம்’ வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு ஒருநாள் முன்னதாக அவர் இதே தொடரின் 500 மீட்டர் ஸ்பிரின்ட் போட்டியில் ‘வெண்கலம் பதக்கம்’ வென்றிருந்ததார். தற்போது, தங்கம் வென்று அந்த சாதனையை மேலும் மெருகேற்றியுள்ளார்.
ஆனந்தகுமார் வேல்குமார் (India's First Ever Gold At Speed Skating)
சென்னையை சேர்ந்த 22 வயதான ஆனந்தகுமார், கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் படித்து வருகிறார். அவரின் மூத்த சகோதரி சுபி சுவேதா வேல்குமாரும் ஒரு இந்திய ஸ்கேட்டிங் வீராங்கனை ஆவார். ஆனந்தகுமாரின் இந்த வெற்றி, ஒரே நாளில் (India’s First Ever Gold At Speed Skating) கிடைத்ததல்ல. பல வருட கடின உழைப்பின் மூலம் அவர் படிப்படியாக பல சாதனைகளை படைத்துள்ளார்.
2021 : உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் 15 கி.மீ எலிமினேஷன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்துள்ளார்.
2023 : ஆசிய விளையாட்டு போட்டியில் 3,000 மீட்டர் ரிலே பிரிவில் வெண்கலம் பதக்கம் வென்று இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார்.
2025 : உலக விளையாட்டு போட்டிகளில் 1,000 மீட்டர் ஸ்பிரின்ட் பிரிவில் வெண்கலம் பதக்கம் வென்றார், அதே போட்டிகளில் ரோலர் ஸ்போர்ட்ஸில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுத் தந்தார். இந்நிலையில் தற்போது, உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன் பட்டத்தையும் வென்று, ஸ்கேட்டிங் விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார்.
பிரதமர் மோடி பாராட்டு
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வெற்றிபெற்ற ஆனந்தகுமாருக்கு, எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் ‘உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2025-ல் ஆண்களுக்கான 1000 மீட்டர் ஸ்பிரின்ட் பிரிவில் தங்கம் வென்ற ஆனந்தகுமாரை (India’s First Ever Gold At Speed Skating) நினைத்து பெருமைப்படுகிறேன். ஆனந்தகுமாரின் உறுதி, வேகம், தியாகம் மற்றும் விடாமுயற்சி ஆகியவை அவரை இந்தியாவின் ஸ்கேட்டிங் உலக சாம்பியனாக மாற்றியுள்ளது. இவரின் சாதனை எண்ணற்ற இளைஞர்களுக்கு புது உத்வேகம் அளிக்கும். அவருக்கு என் வாழ்த்துக்கள் மற்றும் அவரின் எதிர்கால முயற்சிகளுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்’ என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!