மும்பையில் ‘மெல்லிசை சாலை’ திறக்கப்பட்டுள்ளது. இது மும்பை கடற்கரை சாலையில் (நரிமண் பாயிண்ட் – ஒர்லி செல்லும் சாலை) (India’s First Musical Road) அமைந்துள்ளது. இது உலகின் ஐந்தாவது மெல்லிசை சாலையாகக் கருதப்படுகிறது.
மெல்லிசை சாலையின் திறப்பு விழா
இந்த மெல்லிசை சாலையின் திறப்பு விழாவானது பிப்ரவரி 11, 2026 அன்று நடைபெற்றது. மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் இந்த முதல் மெல்லிசை சாலையை திறந்து வைத்தனர். மும்பை மாநகராட்சி (BMC) கூடுதல் கமிஷனர் அவினாஷ் தக்னே, ஹங்கேரி தூதர் பரன் ஜாரி, மற்றும் சிவ சேனா முன்னாள் MP ராகுல் செவாலே ஆகியோரும் இந்த சாலை திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
ஹங்கேரிய தொழில்நுட்பத்தில் உருவான மெல்லிசை சாலை
ஹங்கேரிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த மெல்லிசை சாலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மெல்லிசை சாலையின் மேற்பரப்பில் குறிப்பிட்ட இடைவெளிகளில் ரம்பிள் பட்டைகள் (Rumble Strips) பொருத்தப்பட்டுள்ளன. ரம்பிள் பட்டைகள் (Rumble Strips) குறிப்பிட்ட அலைவண் (Musical Notes) அடிப்படையில் அமைக்கப்படுள்ளன. ஏ.ஆர். ரஹ்மானின் உற்சாகமான இசை அமைப்பு மற்றும் தேசிய உணர்வைத் தூண்டும் தன்மை காரணமாக “ஜெய் ஹோ” பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்திய நிபுணர்களும் மற்றும் ஐரோப்பிய நிபுணர்களும் சேர்ந்து ஏ.ஆர். ரஹ்மானின் “ஜெய் ஹோ” பாடலின் இசை அலைவுகளை பகுப்பாய்வு செய்து, பட்டைகளின் (Rumble Strips) இடைவெளி, ஆழம், மற்றும் அகலத்தை வடிவமைத்துள்ளனர். வாகனங்கள் இந்த பட்டைகள் வழியாக செல்லும்போது, வாகன டயர்களுக்கும் சாலை மேற்பரப்பிற்கும் இடையில் உராய்வு ஏற்படும். இந்த உராய்வின் காரணமாக ‘ஜெய் ஹோ’ பாடல் ஒலிக்கும். வாகனங்கள் இந்த மெல்லிசை சாலையில் 60-80 கி.மீ வேகத்தில் செல்லும்போது இசை தெளிவாக ஒலிக்கும். அதிக வேகம் என்றால் இசைஒலி குழப்பமாகத் தெரிந்து வேகக் கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் மற்றும் விபத்துகளைக் குறைக்கும்.
போக்குவரத்து வரலாற்றில் ஒரு திருப்புமுனை (India's First Musical Road)
இந்த சாலை, வாகன ஓட்டிகளுக்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. மேலும், இந்த மெல்லிசை சாலை ஆனது வாகன ஓட்டுநர்களை (India’s First Musical Road) குறிப்பிட்ட வேகத்தில் வாகனங்களை ஓட்டி செல்வதை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சாலைப்போக்குவரத்து பாதுகாப்பான முறையில் இயங்க உதவும் என உறுதிப்படுத்துகிறது. இது இந்திய நாட்டின் போக்குவரத்து வரலாற்றில் ஒரு முக்கியமான முன்னேற்றம் மற்றும் திருப்புமுனை ஆகும்.
மெல்லிசை சாலையின் பயன்கள்
- வாகனங்கள் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் செல்ல ஊக்குவிக்கிறது.
- வாகன விபத்துகளைக் குறைக்கிறது.
- சாலை போக்குவரத்தை எளிதாக்குகிறது.
- வாகன ஓட்டிகளுக்கு உற்சாகம் அளிக்கிறது.
- வாகன ஓட்டிகளின் தூங்குதலைத் தடுக்கிறது.
- வாகன ஓட்டிகளின் மனஅழுத்தத்தை குறைக்கும்.
- நல்ல சுற்றுலா ஈர்ப்பை தரும்.