India's Youngest Female IAS Officer : இந்திய நாட்டின் இளம் பெண் IAS அதிகாரி அனன்யா சிங்
அனன்யா சிங் உத்தர பிரதேசம் பிரயாக்ராஜ் நகரத்தைச் சேர்ந்தவர். சிறுவயதிலிருந்தே IAS ஆக வேண்டும் என்று கனவு கண்டு வந்த அனன்யா சிங் எந்தப் பயிற்சி மையத்திலும் சேர்ந்து பயிற்சி பெறாமல் சுயமாக படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி (India’s Youngest Female IAS Officer) பெற்றுள்ளார். இவர் தனது பத்தாம் வகுப்பில் 96 சதவீதம், மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் 98.25% வென்று அவற்றுக்கான பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதலிடங்களை வெற்றிகரமாக வென்றவர். இதனைத் தொடர்ந்து டெல்லி ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் பொருளியல் (Economics Honors) பாடப்பிரிவில் அனன்யா சிங் பட்டம் பெற்றார்.
இவர் தனது ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று கனவு மெய்ப்பட 2019-ம் ஆண்டில் UPSC தேர்வெழுத சுயமாக தயாரானார். அதே 2019-ம் ஆண்டிலேயே நாட்டின் இளம் IAS அதிகாரியாகவும் தேர்வாகி மிகப் பெரிய சாதனை புரிந்தார். தற்போது அனன்யா சிங் மேற்குவங்கத்தில் பதவி வகித்து வருகிறார். IAS ஆனது இந்திய நாட்டின் உயரிய பதவிகளில் முதன்மையானதாக கருதப்படுகிறது. இதற்காக நடத்தப்படும் சவால்கள் நிறைந்த UPSC தேர்வு எனும் குடிமைப்பணித்தேர்வை வெல்வதென்பது மிகவும் கடினம் ஆகும். பயிற்சி மையங்களில் பிரத்தியேகமாக சிறந்த பயிற்சி பெற்று இத்தேர்வை குறைந்தபட்சம் மூன்றிலிருந்து நான்கு முறை எழுதினால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்ற நிலை உள்ளது.
UPSC வென்றவர்களில் பெரும்பாலோர் பயிற்சி மையங்களில் பிரத்தியேகமாகத் தயார் ஆனவர்களே ஆவர். இருப்பினும் 22 வயது அனன்யா சிங் UPSC தேர்வை வென்று நாட்டின் இளம் பெண் ஐஏஎஸ் அதிகாரி என்கிற சாதனை படைத்தார். இவருக்கு அடுத்ததாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த அன்சார் ஷேக் என்ற 21 வயது இளைஞர் 2023-ம் ஆண்டில் மிக இளம் வயதில் ஐஏஎஸ் அதிகாரி ஆகி சாதனை புரிந்தார். இருந்தபோதும் இந்திய பெண்களில் அனன்யா சிங்கின் சாதனையை இன்றுவரை யாரும் முறியடிக்கவில்லை.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!