IndiGo Flight Cancellations : இண்டிகோ முடக்கம் தாக்கம் - ‘கல்லா’ கட்டிய மற்ற விமான நிறுவனங்கள்..!
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றாக இண்டிகோ திகழ்ந்து வருகிறது. இது உள்நாடு மற்றும் வெளிநாடு என சர்வதேச அளவில் (IndiGo Flight Cancellations) நாளொன்றுக்கு 2200க்கும் மேலான விமானங்களை இயக்கி வருகின்ற நிறுவனம் ஆகும்.
FDTL-ன் இரண்டாம் கட்டத்தை அமல்படுத்தியதில் ஏற்பட்ட விளைவுகள்
கடந்த மாதம் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஆனது திருத்தப்பட்ட விமான கடமை நேர வரம்பு (FDTL – Flight Duty Time Limitation) விதிமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. விமானிகள் மற்றும் கேபின் குழுவில் உள்ளவர்களின் வேலை நேரத்தை நிர்ணயிக்கும் விதத்தில் FDTL புதிய விதிகளானது அமைக்கப்பட்டுள்ளது. அதாவது விமானிகள் மற்றும் கேபின் குழுவில் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம், வாரத்திற்கு 35 மணிநேரம், மாதத்திற்கு 125 மணிநேரம் மற்றும் வருடத்திற்கு 1,000 மணிநேரம் என வேலை நேரத்தை நிர்ணயத்து உள்ளது. போதுமான கால அவகாசம் இருந்தும் இண்டிகோ நிறுவனம் ஆனது புதிய விதிமுறைகளுக்கு சரியான விதத்தில் தயாராக தவறிவிட்டது. மேலும் விமானப் பயணிகளின் பணி நேரம் வரம்பு (Flight Duty Time Limitation – FDTL) விதிமுறைகளின் இரண்டாம் கட்டத்தை முறையாக அமல்படுத்தாமல் தவறுதலாக அமல்படுத்தியதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது.
இண்டிகோவின் செயல்பாடுகள் மற்றும் நெட்வொர்க் பாதிப்புகள்
இண்டிகோவின் செயல்பாடுகள் மற்றும் நெட்வொர்க் கடந்த இரண்டு நாள்களாக கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இண்டிகோ விமான நிறுவனம் கடந்த சில நாட்களாக, விமான சேவை திடீரென ரத்து செய்யப்படுவதும் மற்றும் விமான தாமதம் போன்ற தீவிர பிரச்சனைகளை (IndiGo Flight Cancellations) எதிர்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இவை அதிகரித்து வருகின்றது. சமூக ஊடகங்களில் பயணிகள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் போராட்டக் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் பல வைரலாகி வருகின்றன.
ரத்து செய்யப்பட்ட விமான சேவைகளின் முழு விவரங்கள் (IndiGo Flight Cancellations)
கடந்த 4.12.2025 அன்று ஆறு முக்கிய மெட்ரோ விமான நிலையங்களில் இண்டிகோவின் சரியான நேர செயல்திறன் (On-Time Performance) 8.5% ஆக குறைந்தது. அன்று மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மறுநாள் 5.12.2025 அன்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு இண்டிகோ விமானங்களின் சேவைகள் ஆனது நள்ளிரவு வரை ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து இயக்கப்படும் இண்டிகோ விமானங்கள் அனைத்தும் 5.12.2025 அன்று ரத்து செய்யப்பட்டது.
FDTL-ன் இரண்டாம் கட்டத்தை அமல்படுத்தியதில் ஏற்பட்ட விளைவுகள்
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றாக இண்டிகோ திகழ்ந்து வருகிறது. இது உள்நாடு மற்றும் வெளிநாடு என சர்வதேச அளவில் நாளொன்றுக்கு 2200க்கும் மேலான விமானங்களை இயக்கி வருகின்ற நிறுவனம் ஆகும். மேலும் கொல்கத்தா, மும்பை, கோவா மற்றும் ஹைதராபாத் (IndiGo Flight Cancellations) உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் நூற்றுக்கணக்கான விமானங்களின் சேவைகள் ஆனது தாமதமாகியுள்ளன மற்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு மேலும் இது போன்ற சில ரத்துகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக விமான நிறுவனம் கூறியுள்ளது.
அமைச்சர் "கடுமையான அதிருப்தியை" வெளிப்படுத்தினார்
இந்த இண்டிகோவின் தற்போதுள்ள சூழ்நிலையைக் குறித்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே. ராம் மோகன் நாயுடு மறுஆய்வுக் கூட்டம் நடத்தி தனது “கடுமையான அதிருப்தியை” வெளிப்படுத்தி உள்ளார். போதுமான கால அவகாசம் இருந்தும் இண்டிகோ ஆனது புதிய விதிமுறைகளுக்கு (IndiGo Flight Cancellations) சரியான விதத்தில் தயாராக தவறிவிட்டதாக அமைச்சர் கே. ராம் மோகன் நாயுடு சுட்டிக் காட்டினார். உடனடியாக தகுந்த நடவடிக்கைகளை எடுத்து செயல்பாடுகளை சீராக்கவும் மற்றும் தற்போதுள்ள சூழ்நிலையைக் காரணம் காட்டி இண்டிகோவின் விமானக் கட்டணங்களை உயர்த்தாமல் இருப்பதை உறுதி செய்யவும் இண்டிகோ நிறுவனத்திற்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
நிலைத்தன்மையை மீட்டெடுக்க இண்டிகோ நடவடிக்கை
இண்டிகோ நிறுவனம் ஆனது தனது செயல்பாடுகள் மற்றும் நெட்வொர்க் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளது. இண்டிகோவின் செயல்பாடுகளில் பல எதிர்பாராத சவால்கள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இண்டிகோ நிறுவனம் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும் நிலைத்தன்மையை மீட்டெடுக்க இண்டிகோ நிறுவனம் ஆனது உடனடியாக தகுந்த நடவடிக்கைகளை தாெடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!