Industrial Investments In Tamil Nadu : தமிழ்நாட்டில் குறிப்பிட தக்க வகையில் தொழில்துறை முதலீடுகள் அதிகரிப்பு
Industrial Investments In Tamil Nadu - தமிழ்நாட்டில் முதலீடுகள் அதிகரிப்பு :
தமிழ்நாட்டில் முதலீடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தமிழ்நாடு ஆனது தற்போது மகாராஷ்டிரா, உபி, மற்றும் கர்நாடகா மாநிலங்களின் முதலீட்டு ஒப்பந்த சாதனைகளை வென்று முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. இரண்டு ஆண்டுகளில் 1.86 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதியை 5.87 பில்லியன் டாலருக்கு உயர்த்தி தமிழ்நாடு அபார சாதனை செய்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கடந்த 2022- ஆம் வருடம் ஜூலை மாதம் தமிழ்நாடு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் (Industrial Investments In Tamil Nadu) மேற்கொள்ளப்பட்டன.
Industrial Investments In Tamil Nadu : மொத்தம் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆனது இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தாகி, அதன் மூலம் 1.25 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் The Guidance Bureau என்ற பிரிவு ஆனது தமிழ்நாட்டில் முதலீடுகளை கண்காணிக்க மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு மூலம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த The Guidance Bureau என்ற பிரிவு ஆனது முதலீடுகளை கண்காணிக்க, ஊக்குவிக்க, அனுமதி அளிக்க, ஈர்க்க உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் ஒற்றை பிரிவாக திறம்பட செயல்பட்டு வருகிறது.
MITSUBISHI ELECTRIC Rs.1,891 கோடி மதிப்பிலான மெகா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது :
Industrial Investments In Tamil Nadu : ஜப்பானைச் சேர்ந்த MITSUBISHI ELECTRIC நிறுவனம் சமீபத்தில் தமிழ்நாடு அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது ரூபாய் 1,891 கோடி மதிப்பிலான மெகா ஒப்பந்தம் ஆகும். சென்னையில் MITSUBISHI ELECTRIC நிறுவனம் தொழிற்சாலையை அமைக்க உள்ளனர். MITSUBISHI ELECTRIC நிறுவனம் ஆனது Air Conditioners மற்றும் Compressers தயாரிக்கும் தொழிற்சாலையை 2 ஆயிரம் ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.
சென்னையில் மொத்த உற்பத்தியை செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்துள்ளது :
Industrial Investments In Tamil Nadu : அனைத்து ஐபோன் தயாரிப்பையும் சென்னையில் மொத்தமாக செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த பாக்ஸ்கான் நிறுவனம் தான் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை உற்பத்தியை செய்து அனுப்பி வருகிறது. பாக்ஸ்கான் நிறுவனம் ஆனது தற்போது தமிழ்நாட்டில் மொத்தமாக உற்பத்தியை செய்ய இருக்கிறது. சீனாவில் பாதி உற்பத்தி மற்றும் சென்னையில் பாதி உற்பத்தி என்று செயல்பட்டு வந்த உற்பத்தியை நிறுத்திவிட்டு மொத்தமாக சென்னையில் உற்பத்தியை செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் சென்னையில் மொத்த முதலீடு செய்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் தற்போது முதலீடுகளை அதிகப்படுத்தி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 மற்றும் 12 மாடலை மொத்தமாக சென்னையில் உற்பத்தி செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் முடிவு செய்துள்ளதால் இனிமேல் இந்த போனில் Made In India என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். தமிழ்நாட்டில் இருந்து 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஐபோன்கள் ஆனது கடந்த ஏப்ரல் மாதம் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.
கிருஷ்ணகிரியில் ஓலா நிறுவனம் :
Industrial Investments In Tamil Nadu : உலகிலேயே மிகப்பெரிய பைக் உற்பத்தி ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் அமைத்து உள்ளது. இந்த இருசக்கர ஓலா உற்பத்தி நிறுவன மையம் ஆனது 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு உள்ளது. உலகிலேயே மிகப்பெரிய இருசக்கர மின்சார வாகன உற்பத்தி மையமான இங்கு தற்போது ஓலா பைக் உற்பத்தியும் நடைபெற்று வருகிறது. இங்கே உற்பத்தி செய்யப்படும் ஓலா பைக்கள் ஆனது முழுக்க முழுக்க எலக்ட்ரிக் பவரில் இயங்கும் பைக் வகைகள் ஆகும். ஓலாவை தொடர்ந்து பல்வேறு இ வாகனங்களின் உற்பத்தி நிறுவனங்கள் ஆனது தமிழ்நாட்டில் இ வாகனங்களை உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. இ வாகனங்களின் உற்பத்தி முதலீடுகள் ஆனது தற்போது தமிழ்நாட்டை தமிழ்நாடு நோக்கி திரும்பத் தொடங்கி உள்ளது.
ஒம்ரான் நிறுவனம் சென்னையில் உற்பத்தியை தொடங்கி உள்ளது :
Industrial Investments In Tamil Nadu : உலகின் நம்பர் மருத்துவ எலக்ட்ரானிக் உற்பத்தி நிறுவனமான ஒம்ரான் நிறுவனம் சென்னையில் அதன் உற்பத்தியை தொடங்கி உள்ளது. ஒம்ரான் நிறுவனம் கடந்த மே மாதம் 128 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. மஹிந்திரா ஓர்கினிசில் பொன்னேரியில் 128 கோடி ரூபாய்க்கு பிளான்ட் ஒன்றை ஒம்ரான் நிறுவனம் அமைத்துள்ளது. தற்போது 2 மாதங்களாக இங்கே உற்பத்தி தொடங்கி நடைபெறுகிறது.
நிசான் நிறுவனம் தமிழ்நாட்டில் ₹5300 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது :
Industrial Investments In Tamil Nadu : தமிழ்நாட்டில் நிசான் நிறுவனம் ஆனது ₹5300 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது. நிசான் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும். ஏற்கனவே தமிழ்நாட்டில் இருக்கும் நிசான் நிறுவன ஆலை ஆனது விரிவுபடுத்தப்பட உள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள ஆலையில் நிசானின் எஞ்சின் கார்கள் மட்டுமே உருவாக்கப்பட்டு வந்தன.
தற்போது இங்கே புதிய நிசானின் எலக்ட்ரானிக் கார் உருவாக்க ஆலை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் ஆனது கையெழுத்தாகி உள்ளது. 5,300 கோடி மதிப்பில் எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்ய நிசான் நிறுவனத்துடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் 2,000 பேருக்கு சென்னையில் வேலைவாய்ப்பு உருவாகும்.
ஹூண்டாய் சென்னையில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய உள்ளது :
Industrial Investments In Tamil Nadu : தற்போது ஹூண்டாய் நிறுவனமும் சென்னையில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய முதலீடு செய்ய உள்ளது. இனிமேல் இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகிக்கும் நிலையில் உள்ளது.
மின்னணு சாதன ஏற்றுமதியில் முதலிடம் :
தமிழ்நாடு மின்னணு சாதனங்கள் துறையிலும் முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாடு மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் புதிய உயரத்தை தொட்டுள்ளது. மின்னணு சாதன ஏற்றுமதியில் உபி, மகாராஷ்டிரா,கர்நாடகா மாநிலங்களின் சாதனைகளை வென்று தமிழ்நாடு முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு இவ்வளவு வேகமாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!