இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய Infinix Hot 50 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது
இன்பினிக்ஸ் நிறுவனம் Infinix Hot 50 5G எனும் புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி போனின் சிறப்பம்சங்கள், விலை மற்றும் விவரக்குறிப்புகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி சிறப்பம்சங்கள் (Infinix Hot 50 5G Specifications) :
- Infinix Hot 50 5G Display : இந்த இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (HD+ LCD) டிஸ்பிளேயுடன் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த போனின் டிஸ்பிளேவில் 1600 x 720 பிக்சல்ஸ், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் போன் பெரிய டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
- Infinix Hot 50 5G Camera : இந்த இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போனில் 48MB சோனி IMX 582 சென்சார் கேமரா + டெப்த் சென்சார் + ஏஐ லென்ஸ் என்ற ட்ரிபிள் ரியர் கேமரா அம்சத்துடன் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் தனியே 16MB எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
- Infinix Hot 50 5G Storage : 4GB RAM + 128GB மெமரி மற்றும் 8GB RAM + 128GB மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
- Infinix Hot 50 5G Battery : 5000mAh பேட்டரி வசதியுடன் இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்ய 36W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது.
- Infinix Hot 50 5G Colors : சேஜ் கிரீன் (Sage Green), ட்ரீமி பர்ப்பிள் (Dreamy Purple), ஸ்லீக் பிளாக் (Sleek Black) ஆகிய மூன்று நிறங்களில் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி போன் விற்பனைக்கு வந்துள்ளது.
- Infinix Hot 50 5G Rate : 4GB RAM + 128GB கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999 ஆகவும், 8GB RAM + 128GB வேரியண்ட் விலை ரூ.10,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளிப்கார்ட் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்குபவர்களுக்கு ரூ.1000 தள்ளுபடியும் உண்டு.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!