Intelligence Bureau Recruitment 2023 : உளவுத்துறையில் வேலை வாய்ப்பு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Intelligence Bureau Recruitment 2023 : இந்திய உளவுத்துறை பணியகத்தில் உதவி புலனாய்வு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறையில் உதவி புலனாய்வு அலுவலர் (ASSISTANT CENTRAL INTELLIGENCE OFFICER GRADE – II / EXECUTIVE) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 995 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
Intelligence Bureau Recruitment 2023 :
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : ASSISTANT CENTRAL INTELLIGENCE OFFICER பதவிக்கு 995 காலிபணியிடங்கள் (Intelligence Bureau Recruitment 2023) நிரப்பப்பட உள்ளன.
- கல்வித் தகுதி (Educational Qualification) : அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு (UG) முடித்திருக்க வேண்டும்.
- வயதுத் தகுதி (Age) : 15.12.2023 தேதி வரை 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும் OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சம்பளம் (Salary) : இந்த ASSISTANT CENTRAL INTELLIGENCE OFFICER பதவிக்கு (Intelligence Bureau Recruitment 2023) தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு ரூ.44,900-1,42,400/- வரை வழங்கப்படும்.
- தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த ASSISTANT CENTRAL INTELLIGENCE OFFICER பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வானது இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English Language) மற்றும் திறனறிதல் (Reasoning Ability) மற்றும் கணிதம் (Numerical Ability) பொது அறிவு (General Awareness) பொதுப் பாடம் (General Studies) ஆகிய ஐந்து பிரிவுகளில் இருந்து தலா 20 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் இடம்பெறும். இதற்கான கால அளவானது 1 மணி நேரம் ஆகும். இரண்டாம் பகுதியில் கட்டுரை எழுதுதல் நடைபெறும். இது 50 மதிப்பெண்களுக்கு 1 மணி நேர கால அளவில் நடைபெறும்.
- விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த ASSISTANT CENTRAL INTELLIGENCE OFFICER பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/86382/Index.html என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date) : இந்த ASSISTANT CENTRAL INTELLIGENCE OFFICER பணியிடங்களுக்கு 15.12.2023 தேதி வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
- விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்த ASSISTANT CENTRAL INTELLIGENCE OFFICER பணியிடங்களுக்கு தேர்வுக் கட்டணம் ரூ.100/- விண்ணப்பக் கட்டணம் ரூ.450/-, SC/ST, PWD, XS, DXS பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
- மேலும் விவரங்களுக்கு :
https://cdn.digialm.com/per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/12/1111108480114278664024.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!