பூனை குடும்பத்தின் பெரிய இனம் கருஞ்சிறுத்தையாகும். இவைகளுக்கு வலுவான மற்றும் நெகிழ்வான உடல், நீண்ட வால், கூர்மையான பற்கள் மற்றும் நகங்களை கொண்ட சக்திவாய்ந்த வேட்டைக்காரர்கள். கருஞ்சிறுத்தைகளின் உடலில் ‘மெலனிசம்’ என்ற கருப்பு நிறமிகள் இருப்பதால் கருப்பு ரோமங்களைக் (Interesting Facts About Black Panther) கொண்டுள்ளன. ஒரு விலங்கு பின்னடைவு அல்லது ஆதிக்கம் செலுத்தும் அல்லீல்களை கொண்டிருப்பதால் மெலனிசம் ஏற்படுகிறது. இந்த அல்லீல்கள் சாதாரண மரபணுக்களின் மாறுபாடுகள் ஆகும்.
கருஞ்சிறுத்தை (Interesting Facts About Black Panther)
கருஞ்சிறுத்தை வாழுமிடம்
கருஞ்சிறுத்தைகள் பெரும்பாலும் மலைப் பகுதிகள், அடர்ந்த செடிகள் மற்றும் மரங்கள் சூழ்ந்த காடுகள், நீர் ஆதாரங்கள் நிறைந்த இடங்களில் வாழ்கின்றன. ஏனெனில் இவை வேட்டையாடுவதற்கும் மற்றும் எதிரிகளிடமிருந்து தப்பிக்க பாதுகாப்பான இடமாகும். மேலும் கருஞ்சிறுத்தைகள் பெரும்பாலும் ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் அதிகளவில் வாழ்கின்றன. நம் இந்தியாவில் மேற்கு வங்காளம், தமிழ்நாடு மேற்கு தொடர்ச்சி மலை, அசாம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் அடர்ந்த காடுகளில் காணப்படுகின்றன. மேலும் பெரும்பாலும் நீரோடைகள், ஆறுகள், குளங்கள் மற்றும் வெள்ளம் நிறைந்த காடுகளுக்கு அருகில் வாழ்கின்றன. தற்போது மனிதர்களின் நுழைவு காரணமாக காடுகள் அழிந்து வருவதால் கருஞ்சிறுத்தைகளின் வாழிடம் குறைந்து வருகிறது.
காடுகளின் பேய்
கருஞ்சிறுத்தை ‘காடுகளின் பேய்’ என அழைக்கப்படுகிறது. ஏனெனில் அதன் கருமையான உடல் இரவில் நல்ல உருமறைப்பை வழங்குகிறது, இதனால் அவற்றை கண்டுபிடிப்பது (Interesting Facts About Black Panther) மிகவும் கடினம். இந்த உருமறைப்பு எதிரிகளிடமிருந்து தப்பிக்கவும், தங்கள் இரையை வேட்டையாடி வளைப்பதற்கும் உதவுகிறது. இருப்பினும் கருஞ்சிறுத்தையின் வாழ்விடம் மனிதர்களின் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் கேள்விக்குறியாகியுள்ளது.
கருஞ்சிறுத்தையின் உணவுகள்
கருஞ்சிறுத்தைகள் இரவில் மட்டுமே வேட்டையாடி அனைத்து வகையான இரைகளையும் சாப்பிடும். அவைகள் மான், முயல், குரங்கு, பறவைகள் மற்றும் காட்டுப்பன்றி போன்ற சிறிய மற்றும் நடுத்தர அளவிலான விலங்குகளை வேட்டையாடி உண்கின்றன. மேலும் ஒற்றைவேட்டையாடியான கருஞ்சிறுத்தை மிகப்பெரிய விலங்குகளையும், ஜாகுவார்கள் மற்றும் முதலைகளை வேட்டையாடுகின்றன.