Gistak Media – Cinema News | Trending News | Latest News

Interesting Facts About Owls : ஆந்தை பற்றி தெரியுமா? வியக்க வைக்கும் உண்மைகள்..!

ஆந்தைகள் பகலில் தூங்கும், மற்றும் இரவில் வேட்டையாடும் பறவை வகை ஆகும். இவை அவற்றின் அபூர்வமான கண்கள், காதுகள், இறக்கைகள் போன்ற அற்புதமான (Interesting Facts About Owls) உடல் அமைப்புகளால் ஒரு சாதாரண பறவையிலிருந்து வேறுபடுகின்றன. இவற்றின் தனித்துவமான திறன்கள் பல வியப்புகளை ஏற்படுத்துகின்றன.

ஆந்தைகள் பற்றிய வியக்க வைக்கும் உண்மைகள் (Interesting Facts About Owls)

சக்திவாய்ந்த காதுகள்

ஆந்தையின் காதுகள் ஒரு காது சற்று மேலே மற்றும் மற்றொரு காது சற்று கீழே என அமையப் பெற்றுள்ளது. ஆந்தையின் காதுகள் அவற்றின் கண்களை விட சக்திவாய்ந்தவை ஆகும். இதனால், எந்த திசையில் இருந்து ஒலி வருகிறது மற்றும் எவ்வளவு தொலைவில் இருந்து ஒலி வருகிறது என்பதை ஆந்தையால் தெளிவாக கணக்கிட (Interesting Facts About Owls) முடியும். அதனால் இது இருட்டில் கூட, ஒலி மட்டுமே வைத்து வேட்டை பிடிக்கும் ஒரே பறவை என்ற சிறப்பை பெற்றுள்ளது.

270 டிகிரி வரை சுழலும்தன்மை பெற்ற தலைகள் 

 ஆந்தையின் தலைகள் 270 டிகிரி வரை சுழலும்தன்மை பெற்றவை. மனிதர்களுக்கு கழுத்தில் 7 எலும்புகள் உள்ளன.  ஆந்தைகளுக்கு மனிதர்களைக் காட்டிலும்  7 எலும்புகள் அதிகமாக உள்ளன. மொத்தமாக 14 கழுத்து எலும்புகள் உள்ளன. கூடுதலாக ரத்தக் குழாய்கள் இருப்பதால் ஆந்தையின் தலைகள் 270 டிகிரி வரை சுழன்றாலும் ரத்த ஓட்டம் தடைப்படாது இருக்கும்.

அசைவற்ற கண்கள்

ஆந்தைகள் தங்கள் கண்களை அசைக்க முடியாது. அதனால் தான் அவை தங்கள் தலை முழுவதையும் 270 டிகிரி வரை திருப்பி பார்க்கிறது.

மழையில் வேட்டையாடாத பறவை

ஆந்தைகள் மழையில் இரையை தேடி வேட்டையாடாது.

சத்தமின்றி பறக்கும் திறன் கொண்ட இறகுகள்

 ஆந்தையின் இறக்கை ஓரங்களில் மென்மையான இறகுகள் உள்ளன. இவை  காற்றை உடைக்கும் வடிவமைப்பு கொண்டவை. முன் இறகு விளிம்புகளில் உள்ள Serrated Fringes (புன்னகை விளிம்புகள்) காற்று ஓட்டத்தை மெதுவாக்கி Turbulence சத்தத்தைத் தவிர்க்கின்றன. இதனால் இவை பறக்கும்போது (Interesting Facts About Owls) சத்தம் வருவதில்லை. இது சத்தமின்றி இவை இரையை அணுகுவதை எளிதாக்குகிறது.​​

Interesting Facts About Owls - Gistakmedia

மிகவும் கூர்மையான நகங்கள்

ஆந்தைகள் பெற்றிருக்கும் மிகவும் கூர்மையான நகங்கள் இவை ஒரு சிறந்த வேட்டைப் பறவையாக செயல்பட உதவுகின்றன. ஆந்தைகள் வேகமாகப் பாய்ந்து கூரிய நகங்கள் மற்றும் அலகால் இரையை பிடிக்கின்றன.

இருட்டில் கூட தெளிவாக பார்க்கும் சிறந்த பார்வை திறன்

ஆந்தைகளின் முன்னோக்கிய பெரிய கண்கள் அதிக அளவில் Rod cells கொண்டவை. இந்த Rod cells இரவின் குறைந்த வெளிச்சத்தில் ஆந்தைகள் சிறப்பாகப் பார்க்க உதவுகின்றன. இவை ஒளியைக் குவித்து பார்வையை மேம்படுத்துகின்றன. இருட்டில் கூட அசையும் எலியைக் கண்டுபிடிக்கும் (Interesting Facts About Owls) திறன் கொண்டவை. இவற்றின் இரவுப் பார்வை ஆனது மனிதனை விட 100 மடங்கு அதிகம் ஆகும்.

சிறந்த பறக்கும் திறன் கொண்ட பறவை

 ஆந்தைகள் சுமார் 64 கிமீ/மணி (40 மைல்/மணி) வேகத்தில் பறக்கும் சிறந்த திறன் கொண்டவை.

தங்கள் வாழ்விடப் பகுதியிலேயே வேட்டையாடும் பறவை

 பொதுவாக ஆந்தைகள் நீண்ட தூரங்கள் பறந்து இரையைத் தேடாமல் தங்கள்    வாழ்விடப் பகுதியிலேயே (Territories) 1-5 கி.மீ. வரை வேட்டைக்காகப் பறக்கின்றன. போலார் போன்ற பெரிய ஆந்தை வகைகள் 10-20 கி.மீ. வரை பயணிக்கும்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top