International Film Festival 2025 : 23-வது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் டிச 11-ல் தொடக்கம்..!
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படும் வழக்கம் ஆனது உள்ளது. அந்த வகையில் தற்போது சென்னையில் 23-வது சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 11-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெற (International Film Festival 2025) உள்ளது. தமிழக அரசு ஆனது இந்திய திரைப்பட வளர்ச்சி கழகத்துடன் இணைந்து இந்த விழாவை நடத்துகிறது. சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் இயக்குனர் ஆனந்த் வெங்கடசாமி, தமிழ் மக்களிடம் சர்வதேச அளவில் உருவான திரைப்படங்களையும் மற்றும் புதுமையான சினிமா படைப்புகளையும் கொண்டு செல்வதே இதன் நோக்கம் என்று கூறியுள்ளார்.
சர்வதேச திரைப்பட விழா பற்றிய குறிப்புகள்
செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் இந்த 23 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவை தொடங்கி வைக்க உள்ளார். இந்த திரைப்பட விழாவில் 27 மொழிகளில் இருந்து 51 நாடுகளைச் சேர்ந்த 122 திரைப்படங்கள் ஆனது திரையிடப்பட உள்ளன. இந்த திரைப்படங்களை திரையிட ராயப்பேட்டையில் உள்ள PVR சத்யம் சினிமாஸ் மற்றும் சிட்டி செண்டர் INOX திரையரங்குகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த திரையிடப்படும் 122 படங்களில் இருந்து சிறந்த 13 படங்களுக்கு விருதுகள் ஆனது வழங்கப்படும். இந்த விழாவின் தொடக்கத்தில் தாரிக் சலேவின் ‘ஈகிள்ஸ் ஆஃப் தி ரிபப்ளிக்’ என்ற திரைப்படம் ஆனது சிறப்பு திரைப்படமாக திரையிடப்பட உள்ளது. இந்த விழாவின் இறுதி நாளில் மார்செல் பரேனாவின் ‘EL 470’ என்ற திரைப்படம் ஆனது திரையிடப்பட உள்ளது. இந்த சர்வதேச திரைப்பட விழாவில் வெளிநாட்டு தூதர்கள், மற்றும் சர்வதேச இயக்குநர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த திரைப்பட விழாவின் நிறைவு நாளில் உலக திரைப்பட போட்டிக்கான சிறப்பு விருதுகள் ஆனது வழங்கப்படும்.
சர்வதேச திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன (International Film Festival 2025)
- இந்த 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் 51 நாடுகளில் இருந்து மொத்தம் 122 படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தப் பட்டியலில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட 14 படங்களும் அடங்கும்.
- மேலும் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு விருது பெற்ற 3 திரைப்படங்களும் மற்றும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு (International Film Festival 2025) விருது பெற்ற 6 திரைப்படங்களும் திரையிடப்பட உள்ளன.
- உலக சினிமா பிரிவில் முதல் முறையாக நேபாளம், மியான்மர், பின்லாந்து, பிலிப்பைன்ஸ், ஜார்ஜியா, ஜோர்டான் போன்ற நாடுகளின் திரைப்படங்களும் மற்றும் பீகாரிலிருந்து தேர்வு செய்யப்பட்ட போஜ்புரி மொழி திரைப்படமும் இந்த விழாவில் இடம்பெற உள்ளன. இந்த போஜ்புரி மொழி திரைப்படம் ஆனது இந்திய பனோரமா பிரிவில் தேர்வு செய்யப்பட்டது ஆகும்.
- மேலும் எம்.ஜி.ஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொழில்நுட்ப மைய மாணவர்களின் திறமையை மேம்படுத்தும் விதத்தில் 6 குறும்படங்களும் இந்த திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளன.
நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டு கால கலைத்துறை பங்களிப்பை சிறப்பிக்கும் விதத்தில் அவரது மெகா ஹிட் திரைப்படமான ‘பாட்ஷா’வும் இந்த விழாவில் திரையிடப்பட உள்ளது.
திரைப்பட விழாவில் இடம் பெறும் தமிழ்ப் படங்களின் விவரங்கள்
பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் 12 தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்பட பிரிவில் போட்டி போடப்பட உள்ள அந்த 12 தமிழ்ப் படங்களின் பட்டியலின் விவரம் இதோ,
- பாட்ஷா
- பிடிமண்
- அலங்கு
- மாமன்
- காதல் என்பது பொது உடைமை
- மாயக்கூத்து
- மெட்ராஸ் மேட்னி
- மருதம்
- ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்
- பறந்து போ
- டூரிஸ்ட் ஃபேமிலி
- வேம்பு
தமிழ் சினிமா கலைஞர்களின் புதிய முயற்சிகளை இந்த 12 திரைப்படங்களும் நன்றாக வெளிப்படுத்தும் மற்றும் உள்ளூர் சினிமாவின் பல்வேறு புதிய கதை களங்களை உலகத் தரத்தில் திரையிடப்படும். இந்த விழாவில் கலந்துகொள்ளும் திரைப்பட ஆர்வலர்கள் சர்வதேச அளவில் உருவான சினிமாக்களின் சிறந்த படைப்புகளை கண்டு ரசிக்கலாம்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!