Gistak Media

IPL மினி ஏலம் – அதிக விலை போன டாப் 10 வீரர்கள்

2023- ம் ஆண்டிற்கான டாடா IPL மினி ஏலம் நேற்று ( டிசம்பர் 23 ) கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்றது. அதாவது ஐபிஎல் மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கி மே இறுதியில் அல்லது ஜூன் தொடக்கத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் போட்டியானது 2008 – ல் தொடங்கி, உலகமுழுவதும் ரசிகர்களை பெற்று இதுவரை வெற்றிகரமாக 15 சீசன்களை நிறைவு செய்துள்ளது. தற்போது 16 சீசன் போட்டிகள் நடைபெற உள்ளதால், நேற்று (டிசம்பர் 23) கொச்சியில் நடைபெற்ற “டாடா ஐபிஎல்” போட்டிக்கான ஏலத்தில் அதிக விலைக்கு போன “டாப் 10 வீரர்களின்” பட்டியல்களை பின்வருமாறு பார்ப்போம்.

1. சாம் கர்ரன் ( Sam Curran )

Sam Currun - Platformtamil

சாம் கர்ரண் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு (18.50 ) கோடிக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவர் ஜூன் 3 – ல்,1998- ல் பிறந்தார். இவர் ஒரு “ஆல்ரவுண்டர்” வீரர் ஆவார். பன்னாட்டுப் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காகவும் உள்ளூர் போட்டிகளில் சர்வேதேச அணியாகவும் விளையாடி வருகிறார்.

20 வயதில் ( Hat – Trick ) எடுத்த இளைய வீரர் ஆவர். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் “சுட்டி குழந்தை” எனவும் அழைக்கப்பட்டார். இரண்டு முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதாவது 2020 மற்றும் 2021 – ஆம் விளையாடினார். இந்த ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கர்ர்னை வாங்க பல அணிகள் காத்துக் கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து ஏலம் விட்டதுமே அனைத்து அணிகளுமே அவரை வாங்க முற்பட்டார்கள்.

இதில் சென்னை, மும்பை, ராஸ்தான் ஆகிய அணிகள் சாம் கார்ரனை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என மல்லுக்கட்டிய நிலையில் திடீரென உள்ளே வந்த பஞ்சாப் சாம் கார்ரனை எடுத்தே தீர வேண்டும் என போட்டிப்போட்டு இறுதியாக 18.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. சாம் கர்ரன் ஏற்கனேவே 2019-ஆம் ஆண்டில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடினர். அதே சமயம் சாம் கர்ரன் இல்லாததால் வருத்தத்தை ஏற்படுத்தியது. 18.50 கோடிக்கு ஏலம் எடுத்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

2. கேமரூன் கிரீன் ( Cameron Green )

Camoron Green - Platformtamil

கேமரூன் கிரீன் இவர் ஐபிஎல் ஏலத்தில் ரூ. 17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டு அதிக விலைக்கு போன வீரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் ஜூன் 3 -ல், 1999 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் அஸ்திரேலிய வீரர் ஆவார்.

13 -வயதுக்கு உட்பட்ட டோர் லீக்கில் விளையாட தொடங்கினார். 16 வது வயதில் WACA முதல் தரத்தில் அறிமுகமானார். இவர் ஒரு ஆல்ரவுண்டர் வீரர் ஆவார். இதனை தொடர்ந்து 2023 – ம் ஆண்டு சிபிஎல் தொடருக்கான ஏலத்தில் ரூ. 17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். இது குறித்து கேமரூன் கிரீன் கூறுகையில் ஐபிஎல் மினி ஏலத்தில் நான் இவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டபோது இது கனவா அல்லது நிஜமா என என்னை நானே கிள்ளி பார்த்து கொண்டேன். இதை நான் எதிர்பார்க்கவேயில்லை, ஏலத்தில் என்னுடைய பெயரை சொன்னபோது உடல் நடுங்கியது. சிபிஎல் ஏலம் என்பது இதுவே எனக்கு முதன் முறையாகும்.

கேமரூன் கிரீனை வாங்கியபோது மும்பை இந்தியன்ஸ் மிகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இது குறித்து மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கடந்த இரண்டு ஆண்டுகளாக கேமரூன் கிரீனை கண்காணித்து வருகிறோம் இவர் மும்பையின் சிறந்த வீரராக திகழ்வார் என நம்பிக்கை தெரிவித்தார்.

3. பென் ஸ்டோக்ஸ்

Ben Stocks - Platformtamil

பென் ஸ்டோக்ஸ் 16.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். இவர் ஜூன் 4-ல், 1991 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் இங்கிலாந்து அணியில் விளையாடி வருகிறார். 2019 – ல் துடுப்பாட்ட உலககிண்ணத்தை வென்று இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த இறுதி ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இவர் கடைசியாக 2021 ல் ராஜஸ்தானில் விளையாடினர். தற்போது நடந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார்.

இவர் ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியில் இருந்த போது 2015 – ஆம் ஆண்டு தோனியின் தலைமையில் விளையாடி இருக்கிறார். இதனால் இவரின் பங்களிப்பு மிகவும் அதிகமாக இருக்கும் என சிஎஸ்கே அணியினர் எதிர்பார்க்கிறார்கள். ஸ்டோக் ஏலம் எடுத்தவுடன் மஞ்சள் நிற பலூனை ஊதுவதும் மற்றும் விசில் அடித்தும் மகிழ்ந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

4. நிக்கோலஸ் பூரன் ( Nicholas Pooran )

Nicolas Pooran - Platformtamil

நிக்கோலஸ் பூரன் 16 கோடிக்கு லக்னோ அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். நிக்கோலஸ் அக்டோபர் 2, 1995 ல் பிறந்தார். வெஸ்ட் இந்தியன்ஸ் நட்சத்திர வீரர் ஆவர். இவர் கடிசியாக ஹைதராபாத் அணியில் IPL போட்டியில் விளையாடினார். பூரனை ஏன் இவ்வளவு தொகை கொடுத்து வாங்கினார்கள் என ரசிகர்கள் குழம்பினர். அதற்க்கு அவரின் நம்பிக்ககையே காரணம் என கவுதம் கம்பிர் கூறினார். வரும் சீசனில் நிக்கோலஸ் வெளிப்படுத்தும் முழுத்திறனின் மேல் உள்ள நம்பிகையால் தான் அதிக தொகை கொடுத்தோம். ஒவ்வொரு வீரனும் 26 வயதிற்கு பின்னரே அவர்களின் உச்சகட்ட ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். அதுபோல நிக்கோலஸ் பூரன் அதிக ரன்களை அடிப்பார். அவரால் 3-4 போட்டிகளை வென்று கொடுக்க முகம் என பயிற்சியாளர் கவுதம் காம்பிர் கூறினார்.

5. ஹாரி ப்ரூக் ( Harry Brook )

Harry Brook - Platformtamil

ஹாரி ப்ரூக் ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது ஏலத்திற்கு எடுத்தது. இவர் பிப்ரவரி 22, 1999 – ல் பிறந்தார். இவர் இங்கிலாந்து நாட்டை சார்ந்தவர். 23 வயதான இவர் தரமான பார்மில் உள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மூன்று சதங்கள் பதிவு செய்துள்ளார். இவரை ஏலத்தில் எடுக்க கடுமையான போட்டிகள் இருந்தன. இதில் ஹைதராபாத் அணி கைவசம் அதிக தொகை இருந்ததால் ரூ.13.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

6. மாயங் அகர்வால் ( Mayank Agarwal )

Mayank Agarwal - Platformtamil

மாயங் அகர்வால் ரூ. 8.25 கொடியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ஏலத்திற்கு வாங்கப்பட்டார். இவர் பிப்ரவரி 16, 1991-ல் பிறந்தார். இவர் கடைசியாக IPL போட்டியில் பஞ்சாப் அணியில் விளையாடினர். அதுமட்டுமல்லாமல் மாயங் அகர்வால் முன்னாள் பஞ்சாப் அணியின் முன்னாள் கேப்டன் ஆவர். இவர் ஒரு சிறந்த தொடக்க ஆட்டகார பேட்ஸ்மேன் ஆவார். நான்கு வெவ்வேறு அணிகளுக்காக விளையாடிய இவர் ஏலப்போரை தூண்டினார். மாயங் அவர்கள் புரூக் உடன் டாப் இரண்டு பேட்டரிகளை எடுத்துள்ளது. மாயங் அவர்கள் சன்ரைசர்ஸ் அணிக்கு சிறந்த கேப்டனாக செயல்படுவார் என இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.

7. ஷிவம் மாவி ( Shivam Mavi )

Shivam Mavi - Platformtamil

ஷிவம் மாவி அவர்கள் ரூ.6 கோடி மதிப்பிற்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஷிவம் மாவி நவம்பர் 26, 1998 -ல் பிறந்தார். இவர் கடந்த ஆண்டு நடந்த IPL போட்டியில் கடைசியாக கொல்கத்தா அணியில் விளையாடினார். இவர் இந்திய கிரிக்கெட் வீரர்களில் மிகவும் நம்பிக்கைகுரியவர் ஆவர். குஜராத் டைடன்ஸில் கே.எஸ். பாரத், ஒடியன் ஸ்மித் மற்றும் கேன் வில்லியம்ஸ் ஆகியோருடன் ஷிவம் மாவி இணைகிறார்.

8. ஜேசன் ஹோல்டர் ( Jason Holder )

Jason Holder - Platformtamil

2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் ஏலத்தின் போது ஜேசன் ஹோல்டர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது
ரூ. 5.75 கொடிகள் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. இவர் நவம்பர் 5, 1991- ல் பிறந்தார். இவர் ஒரு வெஸ்ட் இந்தியன்ஸ் வீரர் ஆவார். ஆல்ரவுண்டர் வீரர் ஆவார். 31 வயதான இவர் பல பிரிமியர் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடைசி ஐபிஎல் போட்டியில் லுக்னோ அணியில் விளையாடினார்.

9. முகேஷ் குமார் ( Mukesh Kumar )

Mukesh Kumar - Platformtamil

கொச்சியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் ரூ. 5.5 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது ஏலத்தில் எடுத்தது. அக்டோபர் 12, 1993 – ல் பிறந்தார். இவர் வங்காளதேசத்திற்காக விளையாடும் இந்திய வீரர் ஆவார்.இவர் ஒரு வேகப்பந்துவீச்சாளர் ஆவார். பஞ்சாப் மற்றும் டெல்லி இடையே போட்டிநடந்து இறுதியாக டெல்லி அணியானது 5.5 கோடி மதிப்பில் ஏலத்தில் வாங்கியது.இவர் அதிக தொகைக்கு ஏலத்தில்போனதால் உள்ளுர் வீரர்கள் அனைவரும் ஆச்சிரியத்தில் இருந்தனர். யாரும் அதிக விலைக்கு போகவில்லை என அனைவரும் இவரை ஆச்சிரியமாக பார்த்தனர்.

10. ஹென்ரிச் கிளாசென் (Heinrich Klaasen )

Heinrich Klaasen - Platformtamil

2023 – ஆம் ஆண்டிற்கான நடந்த ஏலத்தில் ஹென்ரிச் கிளாசென் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் எடுக்கப்பட்டார். 5.25 கோடிக்கு மதிப்பிற்க்கு எடுக்கப்பட்டார். ஜூலை 30, 1991-ல் பிறந்தார். இவர் ஒரு தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் தென்னாப்பிரிக்க தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடுகிறார். தென்னாபிரிக்காவிற்காக அனைத்து போட்டிகளிலும் கலந்துகொண்டு விளையாடியுள்ளார். இவர் கடைசியாக 2019 – ல் நடந்த ஐபிஎல் போட்டியில் விளையாடியனார்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top