ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழாவின் 18-வது சீசன் போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் (IPL 18 Season Starts Today) பாலிவுட் நடிகை திசா பதானி நடனத்துடன் இன்று மாலை 6.00 மணிக்கு தொடங்குகிறது. இன்று தொடங்கி மே மாதம் 25-ம் தேதி வரை நடைபெறும் இந்த ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் 5 முறை சாம்பியன் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2008-ல் பட்டம் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ், 2016-ல் வாகை சூடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 2022-ல் கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுடன் 17 சீசன்களாக சாம்பியன் பட்டம் வெல்ல போராடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் மற்றும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமாகி 2 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக போட்டியிடவுள்ளன.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (IPL 18 Season Starts Today)
இன்று தொடங்கும் ஐபிஎல் 18-வது சீசனின் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது. இரு அணிகளும் புதிய கேப்டனின் (IPL 18 Season Starts Today) தலைமையில் களமிறங்கவுள்ளன. கடந்த 17-வது சீசனில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயஸ் ஐயர் பஞ்சாப் அணிக்கு சென்றுள்ளார். அதே சமயத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை ஒரு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கூட அறிமுகமாகாத ரஜத் பட்டிதார் தலைமையில் களமிறங்குகிறது.
கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர்கள்
கொல்கத்தா அணியில் டாப் ஆர்டரில் சுனில் நரேன், வெங்கடேஷ் ஐயர், குயிண்டன் டி காக், அஜிங்க்ய ரஹானே, ரஹ் மனுல்லா குர்பாஸ் பலம் (IPL 18 Season Starts Today) சேர்க்கிறார்கள். மிடில் ஆர்டரில் மணீஷ் பாண்டே, ரோவ்மன் பாவெல், ரகுவன்ஷி, ஆந்த்ரே ரஸ்ஸல், ரிங்கு சிங் ஆகியோரின் தாக்குதல் ஆட்டம் கொல்கத்தா அணிக்கு பலம் சேர்க்கிறது. மேலும் சுழற்பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன் இவர்களுடன் மொயின் அலியும் பலம் சேர்க்கிறார். வேகப்பந்துவீச்சில் அன்ரிச் நோர்க்கியா, ஹர்ஷித் ராணா, ஸ்பென்சர் ஜான்சன், உம்ரான் மாலிக் கொல்கத்தா அணிக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள்.
பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர்கள்
பெங்களூரு அணியில் டாப் ஆர்டரில் விராட் கோலி, தேவ்தத் படிக்கல், பில் சால்ட், டிம் டேவிட், ஜிதேஷ் ஷர்மா, லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் பலம் (IPL 18 Season Starts Today) சேர்க்கிறார்கள். வேகப்பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட், ரொமாரியோ ஷெப்பர்ட், யாஷ் தயாள், லுங்கி நிகிடியும், சுழற்பந்துவீச்சில் ஜேக்கப் பெத்தேல், கிருணல் பாண்டியா, சுயாஷ் சர்மா ஆகியோர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள்.