IPL 2023 DC vs GT: 5 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி
16 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணியும் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் மோதியது. இந்த தொடரில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றது.
IPL 2023 DC vs GT: டெல்லி கேபிடல்ஸ் IX
பில் உப்பு, டேவிட் வார்னர், பிரியம் கார்க், ரிலீ ரோசோவ், மணீஷ் பாண்டே, அக்சர் படேல், அமன் ஹக்கீம் கான், ரிபால் படேல், அன்ரிச் நார்ட்ஜே, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, கலீல் அகமது.
IPL 2023 DC vs GT: குஜராத் டைட்டன்ஸ் IX
விருத்திமான் சாஹா, சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் தெவாடியா, ரஷத் கான், நூர் அகமது, முகமது ஷமி, ஜோசுவா லிட்டில், மோஹித் சர்மா.
அகமதாபாத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
டெல்லி அணியின் தொடக்கம்
தொடக்க ஆட்டக்காரர் பில் உப்பு ரன் ஏதும் ஆட்டமிழக்க இவரை தொடர்ந்து கேப்டன் வார்னர் 2 ரன்களில் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் ரோசோவ் 8 ரன்களும், மணீஷ் பாண்டே 1 ரன்களும், பிரியம் கார்க் 10 ரன்களும் எடுக்க ஷமியின் பந்து வீச்சில் வெளியேறினர். இதனால் டெல்லி அணி 23 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
6-வது விக்கெட்டுக்கு அக்சர் படேலும், அமன் கானும் கைகோர்த்தனர். இதில் அக்சர் படேல் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அமன் கான் ஐபிஎல் – ல் தனது முதல் அரை சதத்தை பூர்த்தி செய்தார். அமன் கான் 51 ரன்களும், அடுத்து வந்த ரெபெல் பட்டேல் 23 ரன்களும் எடுத்தனர்.நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது.
குஜராத் அணியின் தோல்வி
131 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை எதிர்த்து குஜராத் அணி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விருத்திமான் சஹா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, அடுத்ததாக விளையாடிய சுப்மன் கில் 6 ரன்களும், விஜய் சங்கர் 6 ரன்களும், டேவிட் மில்லர் 0 ஆகியோர் அணி 32 ரன்கள் எட்டுவதுற்குள் அட்டமிழந்து விட்டனர். இதையடுத்து கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், அபினவ் மனோகரும் இணைந்தனர். மனோகர் தனது பங்கிற்கு 26 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த ராகுல் திவேதியா 19வது ஓவரின் முதல் 3 பந்துகளில் 3 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்த 3 பந்துகளில் அபார சிக்ஸர் அடித்து ரசிகர்களை பரவசப்படுத்தினார்.
ஆனால் அந்த ஹாட்ரிக் சிக்ஸர் பலனளிக்கவில்லை. 6 பந்துகளுக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட போது வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா 20வது ஓவரை பரபரப்பாக வீசினார். துல்லியமாக பந்துவீசிய இஷாந்த் சர்மா, திவேதியாவின் விக்கெட்டை எடுத்தது மட்டுமல்லாமல் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து தனது அணிக்கு திரில் வெற்றியை பெற்று தந்தார். ஹர்திக் பாண்டியா 59 ரன்களுடன் கடைசி வரை களத்தில் நின்றார். குஜராத் அணி கொடுக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 125 ரன்களை எடுத்து முடங்கியது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.








