-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
IPL 2023 RR vs LSG: ராஜஸ்தானின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி
மேயர்ஸ் அரைசதம்; ஆவேஸ் கான் சிறப்பான பந்துவீச்சு ; இதனால் ராஜஸ்தானை அதன் சொந்த மைதானத்திலேயே வென்று அதன் தொடர் வெற்றியை நிறுத்தியது லக்னோ.
IPL 2023 RR vs LSG – ராஜஸ்தான் ராயல்ஸ்
ஜாஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஷிம்ரன் ஹெட்மயர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.
IPL 2023 RR vs LSG – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
கே.எல். ராகுல் , கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனல் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் , ஆயுஷ் பதோனி, நவீன்-உல்-ஹக், அவேஷ் கான், யுத்வீர் சிங் , ரவி பிஷ்னாய்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 26-வது லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சாம்சன் முதலில் லக்னோ அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
IPL 2023 RR vs LSG - லக்னோ தடுமாற்றம் :
லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கே.எல். ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் பொறுமையாக ஆடி ரன் சேர்த்தனர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தனர். தடுமாற்றமாக விளையாடிய ராகுல் 39 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த பதோனி 1 ரன்னிலும், தீபக் ஹூடா 2 ரன்னிலும் ஆட்டமிழந்து பெரிதும் ஏமாற்றினர். அடுத்து களமிறங்கிய ஸ்டாய்னிஸ் சிறிது அடித்து ஆடினாலும், மறுமுனையில் கைல் மேயர்ஸ் அரை சதம் அடித்த நிலையில் அஷ்வினின் பந்தில் போல்டு ஆனார். அவர் 51 ரன்களில் அவுட் ஆனார்.
அடுத்ததாக நிக்கோலஸ் பூரன் களமிறங்கினார். பூரனும் ஸ்டாய்னிஸூம் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அடுத்து வந்த குருணால் பாண்டியாவும் பெரிதாக ஒன்றும் ரன் அடிக்கவில்லை . இதனால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
IPL 2023 RR vs LSG - ஆவேஷ் கான் அசத்தல் :
ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஷ்வால் மற்றும் பட்லர் களமிறங்கினர். இருவரும் லக்னோ பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன் சேர்த்தனர். அருமையாக ஆடிய ஜெய்ஷ்வால் 44 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 2 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்த சிறிது நேரத்திலே மெதுவாக ஆடி வந்த பட்லரும் 40 ரன்கள் அடித்து ஸ்டாய்னிஸ் பந்தில் ரவி பிஷ்னோயிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்து வந்த ஹெட்மயர் 2 ரன்களில் அவுட் ஆக அடுத்ததாக ரியான் பராக் களமிறங்கினார். படிக்கல் – ரியான் ஜோடி ஓரளவு விளையாடி ரன் சேர்த்தது. இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை அவேஷ் கான் வீசினார். அந்த ஓவரில் ராஜஸ்தான் அணியால் 8 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றிப் பெற்றது. லக்னோ தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஆவேஷ் கான் 3 விக்கெட்களையும், ஸ்டாய்னிஸ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
IPL 2023 RR vs LSG AWARDS:
- Player of the match: Marcus Stoinis
- Game changer of the match: Avesh Khan
- Catch of the match: Deepak Hooda
- Most Valuable Possession of the Match: Avesh Khan
- Longest six of the match: Jose Buttler
- Electric striker of the match: Nicholas Pooran
- Most fours of the match: Kyle Mayers








