சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு (IPL 2026 CSK vs KKR) சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி ஆனது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியுடன் போட்டி போட உள்ளது. தனது கடைசி போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வென்ற உற்சாகத்தோடு இந்தப் போட்டியில் சென்னை அணி களமிறங்க உள்ளது. இந்தப் போட்டியில் சென்னை அணி தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்து இந்தத் தொடரின் தனது வெற்றிப் பயணத்தைத் தொடருமா என்ற பரபரப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இன்றைய போட்டி ஆனது மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
சென்னை அணி இந்த போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்துமா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, சிவம் துபே, மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோர் இருப்பதாக தெரிகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி ஆனது சஞ்சு சாம்சன், ஆயுஷ் மாத்ரே, ருதுராஜ் கெய்க்வாட் போன்ற டாப்-ஆர்டர் பேட்டிங் வீரர்களைப் பெற்றுள்ளது. இது வலுவான பேட்டிங் வரிசை ஆகும். நூர் அஹ்மத், மற்றும் அகீல் ஹொசைன் போன்ற அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களைப் பெற்றுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானம் ஆனது எப்பொழுதும் சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமானது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆல்-ரவுண்டர் பலமானது குறைந்துள்ளது. மேலும் அணியில் அதிக அளவில் இளம் வீரர்கள் இருப்பது பலவீனமாக பார்க்கப்படுகிறது. கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா இந்தப் போட்டியில் களமிறங்கினால் அது சென்னை அணிக்கு பெரும் சவாலாக அமையும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் சொந்த மண்ணில் விளையாடும் ஒரு சாதகமான நிலையைப் பெற்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கடந்த போட்டியில் வீழ்த்தியதை நினைவில் கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கவனமாக (IPL 2026 CSK vs KKR) விளையாட வேண்டும்.
IPL 2026 CSK vs KKR : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சாதகமான, பாதகமான நிலைகள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆண்ட்ரே ரஸ்ஸல், மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் விளையாட இருப்பதாக தெரிகிறது. போட்டி தொடங்கிய பிறகே, அணிகளின் முழுவீரர்களின் பட்டியல் ஆனது வெளியிடப்படும். மதீஷா பதிரனா, மற்றும் ஹர்ஷித் ரானா ஆகியோரின் வேகப்பந்து வீச்சு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு நல்ல பலம் சேர்க்கும். நரைன், மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் எதிரணியை திணறடிக்க வைக்கும் சிறந்த சுழற்பந்து வீச்சு வீரர்கள் ஆவர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங் வரிசை சாதகமாக இல்லை. அனுபவம் வாய்ந்த வீரர்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் குறைவாக உள்ளனர்.