Gistak Media

IPL 2026 GT vs DC : முதல் வெற்றி பெறுமா குஜராத்?

டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7:30 மணி அளவில் (IPL 2026 GT Vs DC) டெல்லி கேபிடல்ஸ் (DC) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகள் மோத உள்ளன. புள்ளி பட்டியலில் தற்போது டெல்லி அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று  முன்னிலையிலும் மற்றும் குஜராத் அணி 2 போட்டிகளில் தோல்வி அடைந்து கடைசி இடத்திலும் உள்ளன. குஜராத் அணி தனது முதல் வெற்றியை நோக்கி இன்று விளையாட உள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் (DC) அணி வீரர்கள் பட்டியல்

  • சமீர் ரிஸ்வி
  • அக்சர் பட்டேல் (c)
  • KL ரஹுல்,
  • பாத்தும் நிசங்கா,
  • நிதீஷ் ரனா,
  • விப்ரஜ் நிகாம்,
  • டேவித் மில்லர்,
  • டிரிஸ்டன் ஸ்டப்ஸ்,
  • லுங்கி ந்கிடி,
  • குல்தீப் யாதவ்,
  • T நட்ராஜன்,
  • முகேஷ் குமார்

குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி வீரர்கள் பட்டியல்

  • ஷுப்மன் கில் (c),
  • ராஹுல் தேவதியா,
  • ஜோஸ் பட்லர்,
  • சாய் சுதர்சன்,
  • வாஷிங்டன் சுந்தர்,
  • கில்லன் பில்லிப்ஸ்,
  • ராஷித் கான்,
  • முகமது சிராஜ்
  • காகிசோ ரபாடா,
  • அசோக் சர்மா,
  • பிரசித் கிருஷ்ணா

 

IPL 2026 GT vs DC - GISTAK media

IPL 2026 GT Vs DC : டெல்லி கேபிடல்ஸ் அணியின் தற்போதைய நிலை

இதுவரை தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி ஆனது தனது ஹாட்ரிக் வெற்றியை நோக்கி மிகவும் உறுதியாக உள்ளது. தனது சொந்த மண்ணில் ஆடுவது டெல்லி அணி தனக்கு உள்ள கூடுதல் பலமாக கருதுகிறது. நிதானமான ஆட்டத்தைத் தொடங்குவதில் வல்லவரான கே.எல். ராகுல் குஜராத் அணியின் முகமது சிராஜ் பந்து வீச்சை நிலைத்து நின்று ஆடினால் டெல்லி அணி ஆனது நல்ல ஆதிக்கத்தை செலுத்த முடியும். டெல்லி அணியின் சமீர் ரிஸ்வி இதுவரை விளையாடிய 2 இன்னிங்ஸ்களில் அதிக ரன்களை குவித்து அசாத்திய ஃபார்மில் உள்ளார். சமீர் ரிஸ்வி சுழற்பந்து வீச்சை சிறப்பாக துவம்சம் செய்யும் தன்மை உடையவர். ஆனால், உலகின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கானை டெல்லி அணியின் சமீர் ரிஸ்வி எப்படி சிறப்பாக எதிர்கொள்ள போகிறார் என்பதே (IPL 2026 GT Vs DC) போட்டியின் மிக முக்கிய திருப்புமுனையாக இருக்கும்.

IPL 2026 GT Vs DC : குஜராத் டைட்டன்ஸ் அணியின் தற்போதைய நிலை

குஜராத் அணியின் மிக முக்கியமான பேட்ஸ்மேனான கேப்டன் சுப்மன் கில் டெல்லி அணியின் லுங்கி என்கிடியின் பந்துவீச்சைச் சிறப்பாக எதிர்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது. ரஷீத் கான் எப்போதும் சிறப்பாக விக்கெட்டுகளை வீழ்த்துபவர். அவர் இன்று அதிரடி ஃபார்மில் இருக்கும் டெல்லி வீரர் சமீர் ரிஸ்வியை ரஷீத் கான் சிறந்த முறையில் கட்டுப்படுத்தினால் அது குஜராத் அணிக்கு மிகவும் சாதகமான சூழலை தரும். குஜராத் அணியின் நடுவரிசை வீரர்கள் கடந்த போட்டிகளில் சொதப்பி உள்ளனர்.  குஜராத் அணியின் நடுவரிசை வீரர்கள் பொறுப்புடன் கவனமாக விளையாட வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது.

வலுவான நிலையில் உள்ள டெல்லி அணியை குஜராத் அணி வெற்றி பெற வேண்டுமானால்,  குஜராத் அணி  தங்களது பேட்டிங் மற்றும் பவுலிங் துறைகளில் மேம்பட்ட செயல்திறனை (IPL 2026 GT Vs DC) வெளிப்படுத்த வேண்டும்.

 

 

 

 

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top