கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்குமிடையேயான (IPL 2026 KKR vs LSG) போட்டி ஏப்ரல் 9, 2026 அன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் லக்னோ அணி யானது கடைசி பந்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘த்ரில்’ வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸின் அதிரடி பேட்டிங்
முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது அதிரடி பேட்டிங் திறமையை வெளிப்படுத்தியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிறப்பான தொடக்கத்தில் கேப்டன் அஜிங்க்யா ரஹானே 24 பந்துகளில் 41 ரன்களை (4 பவுண்டரிகள், மற்றும் 2 சிக்ஸர்கள்) எடுத்து அணிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்தார். தொடக்கமே மிகவும் சிறப்பாக அமைந்தது. கேப்டன் அஜிங்க்யா ரஹானேயுடன் களமிறங்கிய ஃபின் ஆலன் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய இளம் வீரர் ஆங்ரிஷ் ரகுவன்ஷி தனது அதிரடித்தால் 33 பந்துகளில் 45 ரன்கள் (5 பவுண்டரிகள், மற்றும் 2 சிக்ஸர்கள்) எடுத்தார். ரின்கு சிங் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி ஓவர்களில் விளையாடிய கேமரூன் கிரீன் மற்றும் ரோவ்மன் பவல் ஜோடி லக்னோ பந்துவீச்சாளர்களைத் திணறடித்தனர். கேமரூன் கிரீன் 32 ரன்களுடனும், மற்றும் ரோவ்மன் பவல் 39 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நிர்ணயித்த (IPL 2026 KKR vs LSG) 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 181 ரன்கள் எடுத்தது.
182 ரன்கள் என்ற இலக்கை நோக்கி லக்னோ அணியின் தொடக்கம்
குறைந்த ரன்களில் மிட்செல் மார்ஷ் (15) மற்றும் ஏய்டன் மார்க்ரம் (22) ஆகியோர் ஆட்டமிழந்து வெளியேறியதால் லக்னோ அணியின் தொடக்கமே தடுமாற்றமாக அமைந்தது. மேலும் கேப்டன் ரிஷப் பண்ட் 10 ரன்களிலும், மற்றும் நிக்கோலஸ் பூரன் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தது லக்னோ அணிக்கு ஒரு மிகப்பெரும் பின்னடைவை தந்தது. லக்னோ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த சூழலில், ஆயுஷ் பதோனி 54 ரன்கள் (7 பவுண்டரிகள், மற்றும் 2 சிக்ஸர்கள்) எடுத்து லக்னோ அணியை மீட்கப் போராடினார். லக்னோவின் வெற்றிக்கு கடைசி 4 ஓவர்களில் 54 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களமிறங்கிய முகுல் சௌத்ரி கொல்கத்தா அணியை நிலைகுலையச் செய்தார். முகுல் சௌத்ரி 27 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் எடுத்து (IPL 2026 KKR vs LSG) லக்னோவின் வெற்றிக்கு உயிர் கொடுத்தார்.
IPL 2026 KKR vs LSG : முகுல் சௌத்ரி ஆட்ட நாயகன் விருது பெற்றார்
கடைசி பந்து வரை போராடி ஆட்டமிழக்காமல் லக்னோவை வெற்றிபெறச் செய்த முகுல் சௌத்ரிக்கு ஆட்ட நாயகன் விருது ஆனது வழங்கப்பட்டது.