லக்னோவின் ஏகானா மைதானத்தில் டெல்லி அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் நடைபெற்ற (IPL 2026 LSG vs DC) இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி ஆனது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதன் மூலம் டெல்லி அணி தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது.
லக்னோ அணி முதலில் களமிறங்கி 141 ரன்களை எடுத்தது
டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் இந்தப் போட்டியில் (IPL 2026 LSG vs DC) டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ததால், லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. முதலில் களமிறங்கிய லக்னோ அணி ஆனது141 ரன்களை எடுத்தது. லக்னோ அணி ஆனது முதல் 10 ஓவர்களில் 87 ரன்கள் எடுத்த போதும் அடுத்த 10 ஓவரில் 63 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய மிட்செல் மார்ஷ் தனது அதிரடி ஆட்டத்தால் 35 ரன்களை குவித்தார். அப்துல் சமாத் அதிரடியாக விளையாடி 36 ரன்கள் எடுத்தார். மற்றைய வீரர்களான ரிஷப் பண்ட் 7 ரன்களும், எய்டன் மார்க்கரம் 11 ரன்களும், மற்றும் நிக்கோலஸ் பூரன் 8 ரன்களும் எடுத்து ஏமாற்றம் அளித்தனர். இந்த ஆடுகளமானது பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமான ஆடுகளம் என்பதால் லக்னோ அணியால் 141 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. டெல்லி அணி சார்பாக விளையாடிய டி. நடராஜன் 3 விக்கெட்டுகளையும், லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகளையும் மற்றும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
IPL 2026 LSG vs DC : டெல்லி கேபிடல்ஸ் சிறப்பாக விளையாடி 145 ரன்கள் எடுத்தது
டெல்லி அணியின் தொடக்கம் தடுமாற்றமாக இருந்தது. முதலில் களமிறங்கிய கே.எல். ராகுல் மற்றும் பதும் நிஷங்கா ஆகியோர் சொற்ப ரன்களில் தங்களது ஆட்டத்தை இழந்தனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய ஷமிர் ரிஸ்வி மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் பிரிக்க முடியாத ஒரு பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். அதிரடியாக ஆடிய ஷமிர் ரிஸ்வி 47 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சிறப்பாக விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 32 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார். இவர்களின் 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஆனது டெல்லி அணியின் வெற்றி கனவை உறுதி செய்து 17.1 ஓவர்களில் 145 ரன்களை எடுக்க வைத்தது.
லக்னோ அணி செய்த 3 முக்கிய தவறுகள்
- சரியான கூட்டணி (Partnership) இல்லாமல் விளையாடிய மிடில் வரிசை ஆட்டக்காரர்கள். மிடில் வரிசையில் களமிறங்கிய ஆட்டக்காரர்கள் நிதானத்தைக் கடைப்பிடித்து நிலைத்து நின்று ஆடாமல் வெறும் 19 ரன்களில் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.
- டெத் ஓவர்களில் (Death Overs) அதிரடி காட்டத் தகுதியான பினிஷர்கள் இல்லாமல் போனது. லக்னோ அணியின் அதிரடி வீரர்களான மார்ஷ், பண்ட், மார்க்கரம், மற்றும் பூரன் ஆகிய அனைவரும் முதல் 5 இடங்களிலேயே களம் இறங்கிவிட்டதால் டெத் ஓவர்களில் (Death Overs) டெல்லி பௌலர்களுக்கு அதிரடி அழுத்தம் கொடுக்க முடியவில்லை.
- முறையான பந்துவீச்சுத் திட்டம் இல்லாததும் மற்றும் ஸ்பின்னர்கள் பற்றாக்குறையும் லக்னோ அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. டெல்லி அணியின் 4 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்திய லக்னோ லக்னோ அணிக்கு மேற்கொண்டு விக்கெட்டுகளை எடுக்க இயலவில்லை. இது டெல்லி அணிக்கு சாதகமாக அமைந்தது.