Gistak Media

IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

2026-ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது IPL 2026 Starts 28th March வரும் மார்ச் 28-ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 19வது சீசன் இந்தாண்டு மார்ச் இறுதியில் தொடங்கவுள்ளது. மேலும், இந்த தொடருக்கான வீரர்களின் மினி ஏலம் டிசம்பர் மாதம் நடைபெற்றிருந்தது.

இதனையடுத்து தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தற்போதிலிருந்தே பயிற்சிகளை தொடங்கி வருகின்றனர். மேலும் இந்த தொடருக்கான போட்டி ஆட்டவணையானது தற்போதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், விரையில் போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, டெல்லி, லக்னோ, ஜெய்ப்பூர், குஜராத் என ஒவ்வொரு அணியிலும் சர்வதேச தரம் வாய்ந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளதால், ஒவ்வொரு போட்டியும் சுவாரஸ்யமாக இருக்கும்.

மூன்று மாநில தேர்தல்

தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் வரை பிசிசிஐ (BCCI) காத்திருப்பதால், IPL 2026 போட்டிகளுக்கான அட்டவணையை இரண்டு கட்டங்களாக வெளியிட முடிவு செய்துள்ளது. தேர்தல் பாதுகாப்பு மற்றும் அரசியல் நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, முழு அட்டவணையை வெளியிடாமல், தற்காலிகமாக இரண்டு கட்டங்களாக அட்டவணையை வெளியிட பிசிசிஐ (BCCI) முடிவு செய்துள்ளது.

சின்னசாமி மைதானத்தில் மீண்டும் இறுதிப்போட்டி (IPL 2026 Starts 28th March)

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டித் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, அவ்வணி வீரர்களுக்கு சின்னசாமி மைதானத்தில் அணியின் நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது மைதானத்தில் (IPL 2026 Starts 28th March) அதிகளவில் ரசிகர்கள் கூடியதால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடும் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக சின்னசாமி மைதானத்தில் வரும் காலங்களில் ஐபிஎல் போட்டிகள் மட்டுமில்லாமல் எந்தப் போட்டியும் நடத்தப்படாது என்றும், சின்னசாமி மைதானத்திற்கு பதிலாக வேறொரு மைதானம் கட்டப்படும் எனவும் தகவல் வெளியானது. அதுமட்டுமில்லாமல் 2026 ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணி தங்களுடைய போட்டிகளை புனேவில் விளையாட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

IPL 2026 Starts 28th March - Gistakmedia

ரசிகர்கள் உற்சாகம்

இந்நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த, கர்நாடக கிரிக்கெட் சங்கத்திற்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 35,000 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2026 ஐபிஎல் சீசனின் பிளேஆஃப்கள் மற்றும் இறுதிப் போட்டியும் இந்த மைதானத்தில் நடைபெற இருப்பது ரசிகர்களுக்கு (IPL 2026 Starts 28th March) இரட்டைச் சந்தோஷத்தைத் தந்துள்ளது. இருப்பினும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சின்னசாமி மைதானத்தில் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்கள் என்றும் அவர்களின் மீதமுள்ள இரண்டு போட்டிகளை புனேவில் விளையாடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top