Gistak Media

IPL Points List : ஐபிஎல் புள்ளி பட்டியல் - மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ்..!

லக்னோ :

ஐபிஎல் 2024 சீசன் தற்போது பாதி கட்டத்தை எட்டி உள்ளது. 26 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது புள்ளிப்பட்டியலில் (IPL Points List) எந்த அளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று பார்ப்போம். லக்னோவில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் கடைசி இடத்தில் இருந்த டெல்லி அணி தற்போது முன்னேற்றம் கண்டு வருகிறது.

டெல்லி லக்னோவை வீழ்த்தியது சிஎஸ்கேக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் சிஎஸ்கே புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்தது. லக்னோ மூன்றாவது இடத்தில் இருந்தது. இப்போது லக்னோ அணி டெல்லிக்கு எதிராக தோற்றது. இதன் மூலம் லக்னோ அணியின் ரன்ரேட் 0.43 ஆக சரிந்துள்ளது.

ஐபிஎல் புள்ளிப்பட்டியல் (IPL Points List)

இதனால், நான்காவது இடத்தில் இருந்த சிஎஸ்கே அணி, ஐந்து போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகளுடன் 0.66 என்ற ரன் ரேட்டுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணி 5 போட்டிகளில் விளையாடி 8 புள்ளிகளுடன் முதலிடத்திலும், KKR 4 போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளன.

சிஎஸ்கே மூன்றாவது இடத்திலும், லக்னோ நான்காவது இடத்திலும் உள்ளன. சன்ரைசர்ஸ் அணி 5 போட்டிகளில் 6 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. குஜராத் அணி 6 போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. ஏழாவது இடத்தில் உள்ள மும்பை நான்கு புள்ளிகளுடன் உள்ளது.

பஞ்சாப் அணி 4 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது. டெல்லி அணி தற்போது இரண்டாவது வெற்றியுடன் ஒன்பதாவது இடத்திலும், RCB அணி இரண்டு புள்ளிகளுடன் பத்தாவது இடத்திலும் உள்ளன. தற்போது அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் ஆர்சிபி அணி உள்ளது குறிப்பிடத்தக்கது.இதனால் பெங்களூரு அணி இந்த வருடமும் கோப்பை வெல்லும் கனவு, கனவாகவே செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top