மார்ச் 28, 2026 முதல் மே 31, 2026 வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ள ஐபிஎல் 2026 (IPL Schedule 2026) சீசன் முதற்கட்ட அட்டவணையை BCCI ஆனது மார்ச் 10 அன்று வெளியிட்டது. இந்த அட்டவணையில் மார்ச் 28 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெற உள்ள ஆட்டங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. முழுப் போட்டியின் அட்டவணையானது சட்டப் பேரவை தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியிடப்படும் என BCCI ஆனது தெரிவித்துள்ளது.
இந்த முதற்கட்ட அட்டவணையில் பட்டியிலிடப்பட்டுள்ள 20 ஆட்டங்களும் பெங்களூரு, மும்பை, குவாஹாட்டி, நியூ சண்டிகர், லக்னோ, கொல்கத்தா, சென்னை, டெல்லி, அகமதாபாத், மற்றும் ஹைதராபாத் ஆகிய 10 நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த அட்டவணையில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு அணியும் 4 ஆட்டங்களில் விளையாட உள்ளன. ஒரே நாளில் பிற்பகல் 3.30 மணிக்கு ஒரு ஆட்டமும், மற்றும் இரவு 7.30 மணிக்கு மற்றொரு ஆட்டமும் என 2 போட்டிகள் ஆனது நடைபெற உள்ளன.
பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் வரும் 28-ம் தேதி நடப்பு சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி), ஆனது 2016-ம் ஆண்டு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் இரவு 7.30 மணிக்கு மோத உள்ளது. சென்னை அணி ஆனது மார்ச் 30ஆம் தேதி ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த மார்ச் 30ஆம் தேதி போட்டி ஆனது கவுஹாத்தியில் நடைபெற உள்ளது.
முதற்கட்ட அட்டவணையின் முழு விவரங்கள் (IPL Schedule 2026)
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ள ஐபிஎல் 2026 (IPL Schedule 2026) சீசன் முதற்கட்ட அட்டவணை:
பெங்களூரில் மார்ச் 28 அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டி ஆனது நடைபெற உள்ளது.
- மும்பையில் மார்ச் 29 அன்று மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி ஆனது நடைபெற உள்ளது.
- கௌஹாத்தியில் மார்ச் 30 அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி ஆனது நடைபெற உள்ளது.
- முல்லன்பூரில் மார்ச் 31 அன்று பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் போட்டி ஆனது நடைபெற உள்ளது.
- லக்னோவில் ஏப்ரல் 01 அன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் போட்டி ஆனது நடைபெற உள்ளது.
- கொல்கத்தாவில் ஏப்ரல் 02 அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டி ஆனது நடைபெற உள்ளது.
- சென்னையில் ஏப்ரல் 03 அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் போட்டி ஆனது நடைபெற உள்ளது.
- டெல்லியில் ஏப்ரல் 04 அன்று டெல்லி கேப்பிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் போட்டி ஆனது நடைபெற உள்ளது.
- அகமதாபாத்தில் ஏப்ரல் 04 அன்று குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி ஆனது நடைபெற உள்ளது.
- ஹைதராபாத்தில் ஏப்ரல் 05 அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் போட்டி ஆனது நடைபெற உள்ளது.
- பெங்களூரில் ஏப்ரல் 05 அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி ஆனது நடைபெற உள்ளது.
- கொல்கத்தாவில் ஏப்ரல் 06 அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் போட்டி ஆனது நடைபெற உள்ளது.
- கௌஹாத்தியில் ஏப்ரல் 07 அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் போட்டி ஆனது நடைபெற உள்ளது.
- டெல்லியில் ஏப்ரல் 08 அன்று டெல்லி கேப்பிடல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் போட்டி ஆனது நடைபெற உள்ளது.
- கொல்கத்தாவில் ஏப்ரல் 09 அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் போட்டி ஆனது நடைபெற உள்ளது.
- கௌஹாத்தியில் ஏப்ரல் 10 அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போட்டி ஆனது நடைபெற உள்ளது.
- ஏப்ரல் 11 அன்று பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முல்லன்பூரில் நடைபெற உள்ளது.
- ஏப்ரல் 11 அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் சென்னையில் நடைபெற உள்ளது.
- ஏப்ரல் 12 அன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் லக்னோவில் நடைபெற உள்ளது.
- ஏப்ரல் 12 அன்று மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரில் நடைபெற உள்ளது.
உலகளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்த (IPL Schedule 2026) போட்டிகளை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.