Iraivan Movie First Single : இறைவன் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியீடு
Iraivan Movie First Single :
நடிகர் ஜெயம்ரவி மற்றும் நயன்தாரா கூட்டணியில் உருவாகியுள்ள இறைவன் படத்தின் முதல் சிங்கள் பாடலான அழகை அழகாய் பாடல் (Iraivan Movie First Single) வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
ஜெயம்ரவி நடித்து வரும் இறைவன் படத்தை இயக்குனர் அகமது இயக்கி முடித்துள்ளார். இதற்கு முன்பு வாமனன், மனிதன் உள்ளிட்ட படங்களை கொடுத்த அகமது – ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகியுள்ள இறைவன் படம் ரிலீஸ் ஆகாமல் நீண்ட நாட்களாக தள்ளி போகும் நிலையில், இப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த சைக்கோ த்ரில்லராக உருவாகியுள்ள இறைவன் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஜெயம் ரவி-நயன்தாரா மீண்டும் இணைந்துள்ள படம் இறைவன். இதற்கு முன் மோகன்ராஜா இயக்கிய தனி ஒருவன் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வரும் நிலையில், இந்த ஜோடி மீண்டும் இணையவுள்ளது. இந்நிலையில் தற்போது அகமது இயக்கத்தில் இருவரும் இணைந்து இறைவன் படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் உள்ள பாடல்கள் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் சிறப்பாக உள்ளது. இன்னும் சில தினங்களில் படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ஒரு பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலை யுவன் ஷங்கர் ராஜா, சஞ்சித் ஹெக்டே, கரிஷ்மா ரவிச்சந்திரன் ஆகியோர் பாடியுள்ளனர். மெல்லிசை மன்னர் யுவன் இசையமைத்துள்ள இந்த பாடல், ஜெயம் ரவி-நயன்தாராவின் கெமிஸ்ட்ரியை மீண்டும் ஒருமுறை மெல்லிசையாக வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
தனி ஒருவன் படத்துலேயே இருவரின் கெமிஸ்ட்ரி நன்றாக பேசப்பட்டது. நயன்தாராவின் காதலை ஜெயம் ரவி தனது குறிக்கோளால் ஏற்க மாட்டார். ஆனால் ஒரு கட்டத்தில் அவன் காதலை புரிந்து கொள்வார். அவர்களின் காதலை மென்மையாக வெளிப்படுத்தும் பாடல்கள் படத்தில் மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்நிலையில் இந்த படத்திலும் அதே போன்ற சூழலில் ஜெயம்ரவியின் கையை பிடிக்கிறார் நயன்தாரா. அழகை அழகாய் ஒரு கோப்பையில் ஆரம்பிப்போம் எனத் தொடங்கும் (Iraivan Movie First Single) இப்பாடல் லிரிக் வீடியோவாக வெளிவந்தாலும் யுவனின் இசையில் பாடலும் அதன் காட்சியமைப்பும் இணைந்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் டிரைலர் ராட்சசன், போர் தொழில் போன்ற சைக்கோ படங்களை நினைவுகூர்ந்து ரசிகர்களை பதைபதைக்க வைத்தது. இந்நிலையில், ஆக்ஷன் சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகும் இந்தப் பாடல் (Iraivan Movie First Single) ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!