இந்தியாவில் Israel's Tower Semiconductor-ன் $8 Billion Chip Plant திட்டம்
65 நானோமீட்டர் மற்றும் 40 நானோமீட்டர் சில்லுகளை உருவாக்கும் ஒரு ஆலைக்கான திட்டமிடல் :
இந்திய அரசாங்கத்திடம் இஸ்ரேல் ஆனது $8 Billion Tower Semiconductor Chip Plant திட்டத்தை சமர்ப்பித்துள்ளதாக தேசிய நாளிதழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆனது 11/02/2024 ஞாயிற்றுக்கிழமை செய்தி ஒன்றை (Israel’s Tower Semiconductor) வெளியிட்டுள்ளது. இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி என்பது பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய வணிக நிகழ்ச்சி நிரல்களில் ஒன்றாகும். இதற்காக பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் ஆனது டிசம்பர் 2021 இல் $10 பில்லியன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. தற்போது இஸ்ரேல் ஆனது இந்தியாவில் Israel’s Tower Semiconductor நிறுவனத்தின் $8 Billion Chip Plant திட்டத்தை சமர்ப்பித்துள்ளது. Israel’s Tower Semiconductor ஆனது இந்தியாவில் 65 நானோமீட்டர் மற்றும் 40 நானோமீட்டர் சில்லுகளை உருவாக்கும் ஒரு ஆலைக்கான திட்டத்தை மேற்கொள்ள இருப்பதாக கூறுகிறது. இந்த 65 நானோமீட்டர் மற்றும் 40 நானோமீட்டர் சில்லுகளை வாகனங்கள் மற்றும் அணியக்கூடிய எலக்ட்ரானிக்ஸ் உட்பட பல துறைகளில் பயன்படுத்தப்படும். Israel’s Tower Semiconductor நிறுவனமானது அதன் திட்டத்திற்கு இந்திய அரசாங்கத்திடம் இருந்து அரசாங்க சலுகைகளை கோருகிறது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆனது கருத்துக்கான கோரிக்கைகளுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.
Israel's Tower Semiconductor :
இஸ்ரேலை தளமாகக் கொண்ட Tower Semiconductor ஆனது உயர்-மதிப்பு அனலாக் குறைக்கடத்தி தீர்வுகளின் முன்னணி ஃபவுண்டரி ஆகும். TrendForce Q1-Q3 தரவுகளின்படி $356 மில்லியனுடன் உலகளாவிய ஃபவுண்டரி வருவாயில் Tower Semiconductor ஆனது ஏழாவது இடத்தில் உள்ளது. Tower Semiconductor-ன் ஆண்டு வருவாய் ஆனது $1 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. இந்த Tower Semiconductor ஆனது வாகனம், மருத்துவம், தொழில்துறை, நுகர்வோர், விண்வெளி மற்றும் பாதுகாப்பு போன்ற வளர்ந்து வரும் சந்தைகளில் உலகளவில் 300-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அனலாக் ஒருங்கிணைந்த சுற்றுகளை தயாரித்து வழங்குவதில் சிறந்த பெயர் பெற்ற நிபுணத்துவம் பெற்றுள்ளது. மீண்டும் மீண்டும் இந்தியா தனது குறைக்கடத்தி சுற்றுச்சூழலைக் கட்டியெழுப்ப உதவும் நிறுவனங்களில் Tower Semiconductor ஒன்றாகும்.
Israel Partnership With India In The Chip Space :
Tower Semiconductor ஆனது கர்நாடகாவில் உள்ள ஒரு உற்பத்தி ஆலையில் கடந்த மே 2022 இல் கிட்டத்தட்ட $3 பில்லியன் முதலீடு செய்ய முன்வந்தது. ஆனால் Intel ஆனது Tower Semiconductor-ஐ கையகப்படுத்த முயற்சித்ததால் அந்தத் திட்டம் நிறைவேறவில்லை. தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் (Minister Of State For Electronics And IT – Rajeev Chandrasekhar) கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் Tower Semiconductor-ன் CEO Russel Ellwanger-ரை சந்தித்தார். இந்த சந்திப்பில் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் (Israel’s Ambassador To India) நவோர் கிலோனும் (Naor Gilon) கலந்து கொண்டார். சந்திரசேகரின் கூற்றுப்படி, செமிகண்டக்டர்களில் இந்தியா-டவர் கூட்டாண்மை (Israel Partnership With India In The Chip Space) குறித்து இருவரும் விவாதித்து செயல்பட்டுள்ளனர்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!