கர்நாடக மாநிலம் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இணையாக விண்வெளித்துறையில் பல்வேறு சாதனை படைத்து வருகிறது இஸ்ரோ. அந்த வகையில் இஸ்ரோவில் தற்போது காலியாக உள்ள விஞ்ஞானி (ISRO Scientist Recruitment) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ISRO Scientist Recruitment
1.காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் காலியாக உள்ள விஞ்ஞானி (Scientist) பணியிடங்களுக்கு மொத்தம் 320 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி (Educational Qualification)
இஸ்ரோவில் இந்த விஞ்ஞானி (Scientist) பணியிடங்களுக்கு பி.இ மற்றும் பி.டெக் முடித்தவர்களும், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.வயது தகுதி (Age)
இந்த விஞ்ஞானி (Scientist) பணியிடங்களுக்கு 16.06.2025 அன்று தேதிப்படி 20 வயது முதல் 28 வயதிற்கு மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4.சம்பளம் (Salary)
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் இந்த விஞ்ஞானி (Scientist) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு மத்திய அரசின் 7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் மாதம் ரூ.56100/- சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5.தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
இஸ்ரோவில் இந்த விஞ்ஞானி (Scientist) பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும், தேர்வு மையம் சென்னையில் அமைக்கப்படும் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.விண்ணப்ப கட்டணம் (Application Fees)
இஸ்ரோவில் இந்த விஞ்ஞானி (Scientist) பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.750 ஆகவும், SC/ST பிரிவினருக்கு ரூ.500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
7.விண்ணப்பிக்க கடைசித் தேதி (Last Date)
இஸ்ரோவில் இந்த விஞ்ஞானி (Scientist) பணியிடங்களுக்கு விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ஜூன் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.