Jailer 2 Release Date : ஜெயிலர் 2 ரிலீஸ் எப்போது? ரஜினிகாந்த் தந்த அப்டேட்!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான (Jailer 2) ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி 2023-ல் வெளியான படம் `ஜெயிலர்’. இப்படம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்து பெரிய சாதனையை செய்தது. இப்படத்திற்கு அனிருத்தின் பாடல்கள், கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், கர்நாடக சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் கெஸ்ட் ரோலில் வந்தது, படத்தின் சண்டைக் காட்சிகள் எனப் பல விஷயங்கள் ஹைலைட்டாக அமைந்தன. இந்நிலையில், ரசிகர்களிடையே படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் இதன் அடுத்த பாகம் நிச்சயம் உருவாகும் என அப்போது சொல்லப்பட்டது. அதனை தொடர்ந்து `ஜெயிலர் 2′ படத்தின் வேலைகள் துவங்கி, 2025 பொங்கலன்று படத்தின் புரமோ வீடியோ வெளியானது. பிறகு மார்ச் மாதம் 10-ம் படத்தின் முதல் ஷூட்டிங் சென்னையில் துவங்கியது. பிறகு கோயம்புத்தூர், கேரளாவின் அட்டப்பாடி, கோழிக்கோடு, மைசூர் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
சென்னை திரும்பிய ரஜினி
கடந்த ஒரு வாரமாக கேரளாவில் நடைபெற்று வந்த ஜெயிலர் 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் ஜெயிலர் படப்பிடிப்பின் நிலவரம் குறித்து கேட்டதற்கு, ஜெயிலர் 2 படப்பிடிப்புகள் பணி சிறப்பாக (Jailer 2 Release Date) நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் தொடர்ந்து அவரிடம் நடிகர் மோகன்லால் தாதாசாகிப் பால்கே விருது பெற்றது குறித்து கேட்டதற்கு, அதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன் என்றார்.
ஜுன் மாதம் வெளியாகும் ஜெயிலர் 2 (Jailer 2 Release Date)
தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் ஜெயிலர் 2 திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு, ‘ஜுன் 12-ம் தேதி திரைப்படம் வெளியாகும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான `கூலி’ படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், விமர்சன ரீதியில் பின்னடைவையே சந்தித்தது. கூலி படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனமே `ஜெயிலர் 2′ வையும் தயாரிப்பதால், தற்போது ரசிகர்கள் அனைவரின் பார்வையும், ஜெயிலர் 2 மீது குவிந்துள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!