Gistak Media – Cinema News | Trending News | Latest News

Jallikattu : ஜல்லிக்கட்டு வரலாறும் அதன் முக்கியத்துவமும்..!

ஜல்லிக்கட்டு ஆனது உலக அளவில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு போட்டியாகவே நீடித்து வருகின்றது. தமிழ் பாரம்பரியத்தை பறை சாற்றும் ஒரு வரலாற்று விளையாட்டு ஆகும். சீறிப்பாயும் காளைகளை அடக்கும் இந்த ஜல்லிக்கட்டு ஆனது தமிழர்களின் (Jallikattu) வீரத்துக்கும், மற்றும் ஆர்வத்துக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. சில இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மாட்டுப் பொங்கல் பண்டிகை நாளில் தொடங்கி பல மாதங்களுக்கு சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம் ஆகும்.

ஜல்லிக்கட்டு ஒரு தொன்மையான வீர விளையாட்டு

தமிழகத்தை பொறுத்தவரை ஜல்லிக்கட்டு ஆனது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும்  முற்பட்ட தொன்மை வாய்ந்த வீர விளையாட்டு ஆகும். சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரம், கலித்தொகை மற்றும் மலைபடுகடாம் ஆகியவற்றில் ஜல்லிக்கட்டு குறித்த விரிவான குறிப்புகள் “ஏறு தழுவுதல்” என்ற பெயரில் இடம் பெற்றுள்ளன. இந்த ஜல்லிக்கட்டு சிந்து சமவெளி நாகரிக காலத்திலேயே இருந்ததற்கான சான்றுகள் ஆனது காளை அடக்கும் உருவம் பொறித்த முத்திரைகள் மூலம் அறியப்படுகின்றன. பண்டைய காலத்தில் முல்லை நில (ஆயர்கள்) மக்களின் திருமணத்துடன் ஜல்லிக்கட்டு சம்பந்தப்படுத்தப்பட்டதாக இருந்தது. சங்க காலம் தொட்டு ஏறு தழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், பொல்லெருந்து பிடித்தல், சல்லிக்கட்டு மற்றும் மஞ்சு விரட்டு எனப் பல பெயர்களில் ஜல்லிக்கட்டு (Jallikattu) ஆனது அழைக்கப்பட்டு வருகின்றது. திராவிட இலக்கியங்களில் இந்த ஜல்லிக்கட்டு பற்றிய ஏராளமான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. ஜல்லிக்கட்டு பல நூறு ஆண்டுகளாக தமிழர் வீரத்தை பறைசாற்றும் விளையாட்டாக பேணி காக்கப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டின் பெயர்க்காரணம்

 ஜல்லிக்கட்டு ஆனது “ஜல்லி” (வெள்ளி மற்றும் தங்க நாணயங்கள்) மற்றும் “கட்டு” என்ற சொற்களின் ஒரு கூட்டுக்கலவையாக “காளையின் கொம்புகளில் கட்டப்பட்ட நாணயங்களின் மூட்டை” (முடிச்சு) என்ற அர்த்தம் தருகிறது.

ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டு விளையாடும் முறை (Jallikattu)

காளைகள் மக்கள் கூட்டம் நிறைந்த மைதானத்தின் நடுவே அவிழ்த்து விடப்படும். மைதானத்தில் காத்திருக்கும் வீரர்கள் பாய்ந்து வரும் காளையின் திமிலைப் பிடித்து, அதன் வேகத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும். சில இடங்களில் காளையின் கொம்பில் பரிசுகள் கட்டப்பட்டிருக்கும். வீரர்கள் அந்த காளையின் திமிலைப் பிடித்து, அதன் ஓடும் வேகத்தைத் தடுத்து அந்த காளையின்  கொம்பில் கட்டப்பட்டிருக்கும் பரிசுகளைக் கழற்றுவார்கள். ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்தோடி வரும் காளை மாடுகளின் ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்தத் தயாராக நிற்கும் மாடுபிடி வீரர்களின் உற்சாகத்தையும், மற்றும் அதனைக் கண்டு ரசிக்கக் கூடியிருப்போரின் மகிழ்ச்சியையும் வேறு எந்த விளையாட்டுடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.

ஜல்லிக்கட்டு காளைகள்

ஜல்லிக்கட்டில் நன்கு அறியப்பட்ட பூர்வீக மாடு வகைகளில் உம்பளச்சேரி, பர்கூர், புலிகுளம், காங்கயம் மற்றும் மலைமாடு ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. கூட்டத்திற்கும் மற்றும் சத்தத்திற்கும் பழகுவதற்காக அவை சிறு வயதிலிருந்தே சிறிய நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றன. அவைகளுக்கு சிறந்த உணவு, தினசரி உடற்பயிற்சி மற்றும் நீச்சல் பயிற்சி கூட அளிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. பல ஆண்டு பயிற்சிகள் மூலம் காலப்போக்கில், அவை ஜல்லிக்கட்டில் (Jallikattu) போட்டியிடத் தேவையான வலிமையையும் மற்றும் சுறுசுறுப்பையும் பெறுகின்றன. போட்டிகள் நிறைவடைந்த பின் அவை இனப்பெருக்கத்திற்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இது தமிழ்நாட்டின் உள்ளூர் மற்றும் தனித்துவமான கால்நடை இனங்களைப் பாதுகாக்கும் ஒரு உத்தியாக உதவுகிறது.

Jallikattu - Gistakmedia

ஜல்லிக்கட்டு 2014-ல் தடை செய்யப்பட்டு 2016-ல் தடை நீக்கப்பட்டது

உண்மையில் காளைகள் கொடுமைக்கு உட்படுத்தப்படுகின்றன என்று கண்டறியப்பட்ட பின்னர் உரிமைக் குழுக்களின் (AWBI) கோரிக்கைகள்,  கவலைகள் மற்றும் பீட்டா (PETA) இந்தியாவின் முயற்சிகளைத் தொடர்ந்து விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1960 இன் கீழ் 2014 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு தடை (Jallikattu) செய்யப்பட்டது. அரசாங்கம் 2016 ஆம் ஆண்டில், காளைகள் மற்றும் பங்கேற்பாளர்கள் இருவரின் பாதுகாப்பையும் உறுதி செய்து புதிய விதிகளுடன் தடையை நீக்கியது. ஜல்லிக்கட்டு ஆனது ஒரு சரியான  வழிகாட்டுதல்களுடன் பாதுகாப்பான மற்றும் மரியாதைக்குரிய பாரம்பரியமாகத் தொடர வேண்டும் என்று புதிய விதி அறிவித்தது.

தொடரும் ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு ஆனது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கிறது. மேலும் இது மக்களின் அன்பு மற்றும் ஆர்வத்துடன், இனி வரும் தலைமுறைகளுக்கும் தொடரும் ஒரு வரலாற்று வீரவிளையாட்டு ஆகும்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top