James Cameron Has Ideas For Avatar 6 And 7 : அவதார் அடுத்த பாகம் குறித்து ஜேம்ஸ் கேமரூன் தகவல்
James Cameron Has Ideas For Avatar 6 And 7 :
இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், ராஜமௌலியின ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் குறித்தும் ‘அவதார்’ படத்தின் மேக்கிங் குறித்தும் பேசியுள்ளார். இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘அவதார்’. இந்த படம் உலகம் முழுவதும் ரூ.280 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அதன் அடுத்த பாகம் 2022 இல் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் 3ம் பாகம் இன்னும் வெளியாகவில்லை. 2025ல் வெளியாகும் என கூறப்படுகிறது. அவதார் 4 படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதன் 5வது பாகம் இன்னும் உருவாகவில்லை. ஆனால், 6, 7 ஆகிய பாகங்களுக்கு யோசனைகள் இருப்பதாக ஜேம்ஸ் கேமரூன் (James Cameron Has Ideas For Avatar 6 And 7) கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “ஐந்து பாகங்களின் திரைக்கதையை முழுமையாக எழுதிவிட்டோம். 6 மற்றும் 7 பாகங்களுக்கான யோசனைகள் என்னிடம் உள்ளன. அந்த நேரத்தில் அதை வழங்குவேன்” என்று (James Cameron Has Ideas For Avatar 6 And 7) அவர் கூறினார். அத்துடன், கடந்த ஆண்டு கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகள் விழாவில் ராஜமௌலியை சந்தித்து பேசிய ஜேம்ஸ் கேமரூன், RRR படத்தைப் பாராட்டினார். இந்த நிலையில் சார்ட்டன் விருது விழாவில் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘நான் அவருடன் அந்த நேரத்தில் நேர்மையாக இருந்தேன். இது அற்புதமானது என்று நான் நினைத்தேன். இந்திய சினிமா உலக அரங்கில் கவனத்தை ஈர்ப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று பதிலளித்தார்.
ராஜமௌலியின் 2022 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம்தான் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் மற்றும் பலர் நடித்துள்ளனர். டி.வி.வி.தானையா தயாரித்த இப்படம் ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்த நிலையில், திரையுலகின் உயரிய விருதாக பார்க்கப்படும் ஆஸ்கார் விருதை ‘நாட்டு நாட்டு’ பாடல் பெற்றது. ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!