Jana Nayagan Update : ஜன நாயகன் அப்டேட் கொடுத்த இயக்குநர் எச்.வினோத்
விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜன நாயகன்’ படம் விஜய் சாருக்கு பக்கா ஃபேர்வெல் (Farewell) திரைப்படமாக இருக்கும் என இயக்குநர் ஹெச்.வினோத் (Jana Nayagan Update) தெரிவித்துள்ளார். நடிகர் விஜயின் தமிழக அரசியல் என்ட்ரி ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் 2026-ல் பொங்களுக்கு ரிலீஸாக வர விறுவிறுப்பாக ரெடியாகிறது `ஜனநாயகன்’. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, ப்ரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இறுதிக்கட்டத்தை எட்டிய ஜன நாயகன்
ஜன நாயகன் திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் ஹெச்.வினோத் இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறாராம். மேலும் படத்தின் அனைத்து டப்பிங் பணிகள் முடிவடைந்துவிட்டதாகாவும், இன்னும் விஜய் மட்டும் தான் டப்பிங் பேச வேண்டுமாம். அதையும் விரைவாக முடித்துவிட்டால் படம் ரிலீசுக்கு ரெடியாகிவிடும் என சொல்லப்படுகிறது. அதே சமயம் ஜன நாயகன் ரிலீசுக்கு இன்னும் 4 மாதங்கள் இருப்பதால் படக்குழுவினர் அவசர படாமல் பட வேலைகளை பார்த்து வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் விஜயின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஜன நாயகன் படத்தின் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத் பிறந்தநாள் ஸ்பெஷலாக படத்தின் பி.டி.எஸ் காணொளியை வெளியிட்டிருந்தார்கள். சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் (Jana Nayagan Update) தொடர்பாக இயக்குநர் ஹெச்.வினோத் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாக சுற்றி வருகிறது.
பக்கா ஃபேர்வெல் திரைப்படம் (Jana Nayagan Update)
அந்த வீடியோவில் ஹெச்.வினோத் ” ’ஜன நாயகன்’ விஜய் சாருக்கு நிச்சயமாக பக்கா ஃபேர்வெல் (Farewell) படமாக இருக்கும் எனவும், கமர்ஷியல், மாஸ், ஆக்ஷன் என மூன்றையும் எதிர்பார்த்து படத்திற்கு வாங்க. ஜன நாயகன் திரைப்படம் உறுதியாக ஒரு கம்ப்ளீட் மீல்சாக இருக்கும்” என தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஜூன் மாதம் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணன் “தளபதி விஜயின் அசாதாரண சினிமா பயணத்திற்கு நியாயம் செய்யும் ஒரு படத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம் எனவும் ‘ஜன நாயகன்’ தளபதிக்கு ஃபேர்வெல் மட்டும் கிடையாது, இந்திய சினிமாவின் முகத்தையே மாற்றிய ஒரு ஐகான் கொண்டாட்டமாகவும் இருக்கும்” என கூறியிருந்தார்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!