Jananayagan Movie Audio Launch : மலேசியாவில் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா - படக்குழு அறிவிப்பு
விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆனது வரும் டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி (Jananayagan Movie Audio Launch) மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள Bukit Jalil Stadium-த்தில் மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது. ஒரு அதிகாரப்பூர்வ வீடியோவின் மூலம் KVN புரொடக்ஷன்ஸ் இதை அறிவித்துள்ளது. விஜய் ரசிகர்களை இந்த வீடியோ ஆனது மிகவும் எமோஷனலாக்கிவிட்டது. சில வாரங்களுக்கு முன்பு ஜனநாயகன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
ஜனநாயகன் 2026-ம் ஆண்டு பொங்கலுக்கு திரையிடப்பட உள்ளது
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்தப் படம் ஆனது விஜய்யின் கடைசி படமாக இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் பாபி தியோல், நரேன், கவுதம் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பிரியாமணி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த ‘ஜனநாயகன்’ படம் விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய் அரசியல் ரீதியாக ஜனநாயகன் படத்தில் என்னென்ன விஷயங்களை பேசியிருப்பார் என்ற ஆர்வம் மக்களிடையே பரவலாக உள்ளது. இந்தப் படம் வரும் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படம் வெளியீடுக்கு முன்பே சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் படங்களுக்கு ஹைலைட் அவற்றின் இசை வெளியீட்டு விழா
கடந்த சில வருடங்களில் விஜய் படங்களின் பாடல்களும் மற்றும் இசையும் அவரது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. அவை அவரது படங்கள் வரிசையாக ஹிட் படங்களாக அமைய காரணமாக இருந்தன. விஜய்யின் கத்தி, பீஸ்ட், லியோ உள்ளிட்ட படங்களுக்கு சிறந்த டுயூன்களை கொடுத்த அனிருத்தே இந்த படத்திற்கும் இசையமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.
‘ஜனநாயகன்’ படத்தின் ஹிட் பாடல்கள் (Jananayagan Movie Audio Launch)
ஜனநாயகன் படத்தின் முதல் பாடலான “தளபதி கச்சேரி” என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடல் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகின்றது. தெருக்குரல் அறிவு எழுதிய தளபதி கச்சேரி என்ற பாடலை விஜய், அனிருத், அறிவு ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடலின் வரிகள் ஆனது விஜய்யின் அரசியல் வருகைக்கு ஏற்றவாறு எழுதப்பட்டு உள்ளது. இந்தப் படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடல் கண்டிப்பாக ஒரு மாஸான புரட்சிகரமான பாடலாகத்தான் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இசை வெளியீட்டு விழாவை நேரில் பார்க்கமுடியாதே என்ற ஏக்கம்?
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவின் அதிகாரபூர்வமான அறிவிப்பு ஆனது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்த போதிலும் அந்த விழாவானது தமிழ்நாட்டில் நடைபெறாமல் வெளிநாட்டில் நடைபெறுவது விஜய் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்து உள்ளது. விஜய்யின் சினிமா சார்ந்த கடைசி விழாவை தங்களால் நேரில் (Jananayagan Movie Audio Launch) பார்க்கமுடியாதே என்ற ஏக்கம் ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சியான திமுக சார்பில் ஜனநாயகன் படத்துக்கும் அதன் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கும் பிரச்சனைகள் ஏற்படலாம் என்ற கணிப்பில் வெளிநாட்டில் நடத்த விஜய் திட்டமிட்டிருக்கிறார் என்று தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
விஜய் ரசிகர்கள் கடைசியாக கேட்கப் போகின்ற குட்டி ஸ்டோரி
வழக்கமாக இசை வெளியீட்டு விழாவில் விஜய் ஒரு குட்டி ஸ்டோரியை கூறி தனது ரசிகர்களை மகிழ்விப்பார். அதனால் இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன குட்டி ஸ்டோரி சொல்லப் போகிறார் என்ற ஆர்வமும் அதே நேரத்தில் இதுவே தாங்கள் கடைசியாக கேட்கப் போகின்ற குட்டி ஸ்டோரி என்ற சோகமும் விஜய் ரசிகர்களை ஆட் கொண்டுள்ளது.
ஜனநாயகன் படக்குழுவின் புதிய அப்டேட்
அரசியல் பிரவேசம் செய்து தீவிரமாக அரசியல் பிரச்சாரங்கள் மேட்கொண்டு வரும் விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!