Gistak Media

Jananayagan Movie Leaked Online : இணையத்தில் கசிந்த ‘ஜனநாயகன்’.. விஜய், படக்குழுவினர் அதிர்ச்சி?

சுமார் 500 கோடி ரூபாய் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தளபதி விஜய் நடித்து  உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளைப்  பெற்றுள்ளது. தற்போது இத்திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக கசிந்துள்ளதாக வெளியான தகவல்கள் (Jananayagan Movie Leaked Online) திரையுலகின் அனைத்து பிரிவுகளையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒட்டுமொத்தத் திரையுலகையும் உலுக்கி உள்ளது.

ஜனநாயகன் பட பொங்கல் விடுமுறை வெளியீடு தள்ளிப்போனது

இப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தப் படத்தில் மதம் மற்றும் பாதுகாப்புப் படை சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றிருப்பதால், தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) பெறுவதில் பெரும் சிக்கல் ஆனது ஏற்பட்டது. தணிக்கை வாரியம் ஜனநாயகன் படத்தை மறுஆய்வுக் குழுவிற்குப் பரிந்துரை செய்தது. நீண்ட கால போராட்ட நிலை நீடித்தது. அதன் பிறகு பார்வையிட்ட மறுதணிக்கைக் குழு ஒப்புதல் அளித்தது. அதனால் ஜனநாயகன் படக்குழுவினர் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு, மே மாதம் இரண்டாம் வாரத்தில் ஜனநாயகன் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.

Jananayagan Movie Leaked Online - GISTAK media

இணையத்தில் கசிந்ததாக வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

கடந்த ஏப்ரல் 9-ம் தேதி படத்தின் முதல் 5 நிமிடக் காட்சிகள் (விஜய்யின் இன்ட்ரோ சீன் உட்பட) இணையத்தில் கசிந்ததாக வெளியான அதிர்ச்சித் தகவல்கள் விஜய் உள்ளிட்ட படக்குழுவினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து ஏப்ரல் 10-ம் தேதி இப்படத்தின் 3 மணி நேரம் கொண்ட முழுத் திரைப்படமும் சட்டவிரோதமாக மர்ம நபர்களால் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது (Jananayagan Movie Leaked Online).

Jananayagan Movie Leaked Online : திரைத்துறையினரின் கண்டனங்கள்

இச்சம்பவத்திற்குத் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, சிவகார்த்திகேயன், விஷால், சிரஞ்சீவி, விஜய் ஆண்டனி, ஜீவா, ஜி.வி. பிரகாஷ் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட பலரும் தங்களது ஆழ்ந்த எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளனர். இணையத்தில் படத்தை வெளியிட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கக் கோரி பல்வேறு புகார்களைப் பதிவு செய்துள்ளனர். திரையரங்குகளில் படம் வெளியாகும் வரை ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திருட்டுப் பிரதிகளைத் தவிர்த்து காத்திருக்குமாறு படக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top