இப்படம் ஜனநாயகத்தை மையமாகக் கொண்டு அரசியல் தலைவரின் சித்தாந்த மோதல்களை சித்தரிக்கும் படம் ஆகும். இது ஒரு ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் நிறைந்த படமாக கருதப்படுகிறது.
விஜய் நடித்த “ஜனநாயகன்” படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் “புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்றும் (Jananayagan Postponed) படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருந்தது. இன்று 8.01.2026 வரை ஜனநாயகன் படத்தின் புதிய வெளியீட்டு தேதி உறுதியாக அறிவிக்கப்படவில்லை. இது விஜய் நடிக்கும் கடைசி சினிமா என்ற கருத்து நிலவுவதால், விஜய் ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு ஆனது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தளபதி நடிகர் விஜய்யின் ரசிகர்கள் பொறுமை காக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
CBFC தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தாமதம்
டிசம்பர் 19 அன்று தணிக்கை குழுவிற்க்கு சமர்ப்பிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ படத்துக்கு CBFC தணிக்கை சான்றிதழ் உரிய நேரத்தில் கிடைக்கவில்லை என்பதால் ‘ஜனநாயகன்’ படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 9-லிருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் “புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.
KVN Productions அவசர மனு தாக்கல் (Jananayagan Postponed)
சென்சார் வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்த காரணத்தால் படக்குழுவானது சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தது. KVN Productions ஜனநாயகன் படத்திற்கு ரூ.500 கோடி முதலீடு செய்துள்ளதாகவும், பெரும் இழப்பு ஏற்படும் என வாதிட்டது. வாதங்களை பதிவு செய்த நீதிபதி P.T ஆஷா நீதிபதி தணிக்கை வாரியத்தின் அதிகாரத்தை சுட்டிக் காட்டி நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தினார்.
சில அரசியல் கருத்துகள், மதம் மற்றும் ராணுவம் சார்ந்த அடையாளங்கள் ஜனநாயகன் படத்தில் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இவை காரணமாக தணிக்கை குழு ‛ஜனநாயகன்’ திரைப்படத்தை மீண்டும் மறு தணிக்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. ‛ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்று கிடைப்பது தள்ளி போவதால் திரைப்படம் ஜனவரி 9-ம் தேதிக்கு பதில் வெளியீடு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீதிபதி P.T ஆஷா ஜனநாயகன் படத்தின் CBFC தணிக்கை சான்றிதழ் தொடர்பான (Jananayagan Postponed) வழக்கின் தீர்ப்பை ஜனவரி 9, 2026 தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
தளபதி நடிகர் விஜய் நடித்திருக்கும் “ஜனநாயகன்” படம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாக இருந்த நிலையில், சென்சார் சான்றிதழ் தொடர்பான வழக்கு நிறைவடையாமல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால், படத்தின் வெளியீடு ஆனது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜனநாயகன் புதிய ரிலீஸ் தேதியை பண்டிகை போல் கொண்டாடுவோம்
ஐரோப்பா உட்பட உலகம் முழுவதும் உள்ள 39 நாடுகளில் ஜனநாயகன் பட ரிலீஸ் ஆனது ரத்து செய்யப்பட்டு படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனநாயகன் பட டிக்கெட் ரிஃபண்டுகளால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இது உலகளவில் உள்ள விஜய் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்திய போதிலும் படக்குழு கோரிய பொறுமையை ஏற்றுக்கொண்டு கடுமையான எதிர்ப்பு மற்றும் போராட்டங்களில் (Jananayagan Postponed) இதுவரை ஈடுபடவில்லை. KVN Productions படக்குழு கோரிய பொறுமையை ஏற்றுக்கொண்டு, விஜய்யின் ரசிகர்கள் அவரது அரசியல் பயணத்திற்கு ஆதரவாக இருப்பதில் உறுதியாக உள்ளனர். விஜய் ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தங்களுக்கு வலிமையாக உள்ளது என்றும் புதிய தேதியை பண்டிகை போல் கொண்டாடுவோம் என KVN Productions படக்குழு அறிக்கையில் ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி செலுத்தி உள்ளது.
ஆட்டம் பாட்டம் கொண்டாடிய கூட்டம் இன்று பொறுமை காக்கிறது
ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டின்போது ஆட்டம், பாட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் என கொண்டாடிய விஜய் ரசிகர்கள் தற்போது பொறுமை காக்கின்றனர். எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்கள் என வன்முறைகளில் ஈடுபடாமல் பொறுமை காத்து ஆதரவு அளிக்கின்றனர். விஜய் ரசிகர்களின் பொறுமை ஆதிக்கம் செலுத்துகிறது. சோகத்துடன் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சமூக ஊடகங்களில் விஜய் ரசிகர்களின் “எப்போது வா ஜனநாயகா” ஹேஷ்டேக்குகளுடன் பதிவுகள் பெருகிய வண்ணம் உள்ளது.