நடிகர் விஜய் நடிக்கும் கடைசி படமாக கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்களிடம் மிகவும் அதிகரித்துள்ளது. ஹெச்.வினோத் இயக்கியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தில் கதாநாயகன் நடிகர் விஜய்க்கு (Jananayagan Remake News) இணையாக நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், நரேன், பிரியாமணி மற்றும் மமிதா பைஜூயும் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்துக்கு சிறப்பாக இசையமைத்துள்ளார். இந்த ‘ஜனநாயகன்’ திரைப் படம் வரும் ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பிரம்மாண்டமாக நடைபெற்ற ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா
மலேசியாவின் கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் பங்கேற்று சிறப்பித்துள்ளனர். தனது ரசிகர்களின் பலத்த கரகோசத்துக்கு மத்தியில் ரசிகர்களை நோக்கி கை அசைத்தவாறு கோட் சூட் அணிந்திருந்த நடிகர் விஜய் மேடையில் ரேம்ப் வாக் செய்தார்.
தீ போல பரவும் ரீமேக்தான் என்ற தகவல் (Jananayagan Remake News)
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படம் தான் விஜய்யின் கடைசி படம் என்றும் விஜய் அவர்கள் அரசியலில் இறங்கி விட்டதால் இனி படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது அனைவரும் அறிந்த விஷயம் ஆகும். தற்போது ஜனநாயகன் திரைப்படம் பகவந்த் கேசரி என்ற தெலுங்கு மொழி திரைப்படத்தின் ரீமேக்தான் என்ற தகவல்கள் தீ போல பரவி வருகின்றன.
"'ஜனநாயகன்' படம் 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக்கா?"
தற்போது சமூக வலைதளங்களில் ’ஜனநாயகன்’ படம் தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி பரவி வருகின்றது. பகவந்த் கேசரி’ படத்தின் காட்சிகளோடு ’ஜனநாயகன்’ படம் தொடர்பான புகைப்படங்கள் ஒப்பிடப்பட்டு ஜனநாயகன்’ படம் ரீமேக் தான் என்று சில மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் (Jananayagan Remake News) செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் அனில் ரவிபுடியிடம் “‘ஜனநாயகன்’ படம் ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக்கா?” எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு இயக்குநர் அனில் ரவிபுடி, பொறுத்திருங்கள் “‘ஜனநாயகன்’ படம் ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக்கா?” இல்லையா என்பது படம் வெளியான பிறகுதான் தெளிவாக உங்களுக்கு தெரியும் என்று பதிலளித்துள்ளார். இந்த படம் திரைக்கு வரும் வரை இதை தளபதி விஜய் படமாகவே கருதுமாறு இயக்குநர் அனில் ரவிபுடி ரசிகர்களை கேட்டுக்கொண்டார். மேலும் இதை விஜய் படமாக பாருங்கள் என இயக்குநர் அனில் ரவிபுடி ரசிகர்களை கேட்டுக்கொண்டார்.