விஜய் நடிக்கும் கடைசி படமான “ஜனநாயகன்” வரும் 9 ஆம் தேதி வெள்ளித்திரைகளில் திரையிட திட்டமிட்டுள்ள நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் (Jananayagan Trailer) ஆனது 03.01.2025 அன்று வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் அறிவிப்பை படக்குழு ஒரு போஸ்டர் மூலம் வெளியிட்டது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளிலும் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
படம் சொன்ன தேதியில் வெளியாகுமா?
சென்சார் உறுப்பினர்கள் பல வாரங்களுக்கு முன்பே ஜனநாயகன் படத்தை பார்த்து ‘U/A’ சான்றிதழைப் பரிந்துரைத்து உள்ளனர். இருந்தபோதும் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக சென்சார் சான்றிதழ் ஆனது வழங்கப்படவில்லை. நடிகர் விஜய் அவர்கள் சென்சாரை சான்றிதழ் வழங்கவிடாமல் தடுப்பது யார்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். மேலும் நடிகர் விஜய் அவர்கள் ஆவேசமாக தனது பதிவில், “தடைகள் பலவும் வரலாம், தட்டிப் பறிக்க சில கூட்டங்களும் வரலாம், நாம் அனைத்து தடைகளையும் தகர்த்து எறிந்து வெற்றி வாகை சூடப் போகிறோம்.” என குறிப்பிட்டுள்ளார்.
பட்டையை கிளப்பி வரும் "தளபதி கச்சேரி" என்ற பாடல் (Jananayagan Trailer)
அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவானது கடந்த வாரம் மலேசியாவில் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்றது. இதுவரை இந்த படத்தின் 4 பாடல்கள் ஆனது வெளியாகி உள்ளது. இந்த 4 பாடல்களில் “தளபதி கச்சேரி” என்ற பாடல் ஆனது வைரலாகி பட்டையை கிளப்பி வருகின்றது. மேலும் “ராவண மகன்டா” என்ற பாடல் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.
2.52 விநாடி நீளமான 'ஜனநாயகன்' படத்தின் ட்ரெய்லர்
விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்தின் ட்ரெய்லர் 2.52 விநாடி நீளமானது. இந்த ட்ரெய்லர், அவரது கதாபாத்திரமான தளபதி வெற்றி கொண்டான் அச்சுறுத்தல்களிலிருந்து தனது மகளை காக்கும் தகப்பனாகவும் மற்றும் மக்கள் நலனுக்காக அரசியல் பஞ்ச் வசனங்களுடன் போராடும் தலைவராகவும் காட்டுகிறது. “ஜனநாயகன்” படத்தில் நிறைய அரசியல் வசனங்கள் உள்ளன. அவை ரசிகர்கள் உணர்ச்சிவசப்படும் வகையில் அரசியல் உணர்வுகளைத் தூண்டுகின்றன. இந்த ட்ரெய்லரில் பழிவாங்கல் தொடர்பான சமூக நீதி கருப்பொருள் அழுத்தமாகக் காட்டப்பட்டுள்ளது. அரசியல், ஆக்ஷன் மற்றும் தந்தை-மகள் உணர்ச்சி சார்ந்த காட்சிகள் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளன.
ஊழல் அரசியல்வாதிகளை சாட்டையால் அடிக்கும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், சண்டை காட்சிகள் மற்றும் ராணுவம் சார்ந்த காட்சிகள் முக்கிய இடம்பெற்றுள்ளன. அனிருத் ரவிச்சந்தரின் பின்னணி இசை ஆனது ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெறும் வகையில் உள்ளது.