கேவிஎன் புரொடக்சன்ஸ் சென்னை ஹைகோர்ட்டில் நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தது. தணிக்கை குழு பரிந்துரைத்த 14 காட்சிகளை நீக்கியும் படம் ரிலீஸ் செய்ய முடியாது என்று (Jananayakan Legal Issue) தெரிவித்தனர். மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் மற்றும் ராணுவ படைகளின் இலச்சினை பயன்படுத்தி இருப்பதால் சென்சார் சான்று மறுக்கப்பட்டது. ராணுவதுறை நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதைத் தொடர்ந்து வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் காட்சிகளை ரத்து செய்தனர்.
சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு
கேவிஎன் புரொடக்சன்ஸ் சென்னையில் ஹைகோர்ட்டில் நடிகர் விஜய்யின் ‛ஜன நாயகன்’ படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கக் கோரி வழக்கு தொடர்ந்தது.
ஜனநாயகன் படத்துக்கு U/A சான்றிதழ்
கேவிஎன் புரொடக்சன்ஸ் சென்னையில் ஹைகோர்ட்டில் நடிகர் விஜய்யின் ‛ஜன நாயகன்’ படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கக் கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா ஜனவரி 9-ம் தேதி காலை 10.30 மணிக்கு U/A சான்றிதழ் ஜனநாயகன் படத்துக்கு சான்றிதழ் வழங்க தீர்ப்பு வழங்கினார். நீதிபதி ஆஷா ஜனநாயகன் படத்தை மறுஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்து சான்று கொடுக்குமாறு தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பு விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. இந்த உத்தரவு படம் எப்போது வெளியாகும் என்ற குழப்பத்தில் காத்திருந்த ரசிகர்களுக்கு மிக்க மகிழ்ச்சியை வழங்கியது.
தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை (Jananayakan Legal Issue)
தனி நீதிபதி ஜன நாயகன் படத்துக்கு ‘U/A’ சான்றிதழ் வழங்க சிபிஎஃப்சிக்கு உத்தரவிட்டதை சென்னை நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளது. மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் சார்பில் இந்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இந்த தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கூறுகிறது.
வழக்கு விசாரணை ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னை நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தற்காலிகமாக இடைநிறுத்தி வழக்கு விசாரணையை ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. இதனால் படம் பொங்கலுக்கு வெளியாக முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு
மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் தற்போது நடிகர் விஜய்யின் ‛ஜன நாயகன்’ படத்துக்கு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது.