Jasprit Bumrah Injury: பும்ராவுக்கு நியூசிலாந்தில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் இன்னும் சில நாட்களில் மீண்டும் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழும் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah), காயம் காரணமாக 6 மாதங்களுக்கும் மேலாக விளையாடாமல் இருந்தார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பும்ரா முதுகில் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
பும்ரா (Jasprit Bumrah) இல்லாததால், இந்திய அணியின் வேகப் பிரிவு சற்று பலம் இல்லாமல் இருக்கிறது. அணியில் ஷமி, சிராஜ் மற்றும் பிற வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும், பும்ரா இருந்தால் பலம் எப்படி இருக்குமோ அதுபோல் இல்லை. அவர் அணியில் இடம்பிடித்திருப்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், Jasprit Bumrah-க்கு நியூசிலாந்தில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாத இறுதியில் அறுவை சிகிச்சை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் இருந்து அவர் விலகுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இருப்பினும், Jasprit Bumrah-க்கு கூடுதல் சிகிச்சை அளிக்கப்படும் என்றும், இதிலிருந்து குணமடைய இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஜூன் மாதம் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. பும்ரா (Jasprit Bumrah) கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாடினார். ஆனால் இந்த ஆண்டு இறுதியில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளதால், அதில் பும்ரா (Jasprit Bumrah) பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு விளக்கம் அளித்துள்ள இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பும்ரா முழு உடல் தகுதி இருந்தால் மட்டுமே அணியில் சேர்க்கப்படுவார் என்று கூறியுள்ளார். அவசரகாலத்தில் அணியில் சேர்க்கப்பட மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.