Gistak Media

ஐபிஎல் தொடரில் நேரடியாக விளையாடுவார் பும்ரா (Jasprit Bumrah)

இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளராக வலம் வருபவர் பும்ரா (Jasprit Bumrah). ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பும்ராவின் பெயர் வரவில்லை. பும்ரா நேரடியாக IPL தொடரில் விளையாடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசியக்கோப்பைக்கு முன்னதாகவே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா முதுகு பகுதியில் காயமடைந்து அணியிலிருந்து விலகினார். காயமானதால் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.

பும்ராவிற்கு காயங்கள் ஆனதால் கடந்த 5 மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் தொடரில் விளையாடாமல் இருக்கிறார். உடல் காயம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், பெங்களூரில் ஒரு சில பயிற்சி ஆட்டங்களை விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாக்கு எதிராக இருக்கும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடக்கூடிய வீரர்களின் பெயர் பட்டியல்கள் வெளியானது, இந்த பட்டியலில் பும்ராவின் பெயரானது பட்டியலில் இடம் பெறவில்லை. இதனால் IPL தொடரில் நேரடியாக களமிறங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தொடரை அடுத்து உலகக்கோப்பை ஒருநாள் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன் இறுதி போட்டி ஆகிய ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்கும் விதமாக பும்ரா தனது உடலை தகுதிப்படுத்தி வருகிறார். பும்ரா(Jasprit Bumrah) அணியில் இல்லாததால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top