Javvarisi Benefits In Tamil : ஜவ்வரிசியின் நன்மைகள் மற்றும் பயன்கள்...
Javvarisi Benefits In Tamil :
Javvarisi Benefits In Tamil : மரவள்ளிக் கிழங்கில் இருந்து எடுக்கப்படும் ஒரு வகை ஸ்டார்ச்சிலிருந்து செய்யப்படுவதே “ஜவ்வரிசி” இதனை சாகோ, சகுடானா, சௌவாரி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர். ஜவ்வரிஸ்சியில் அதிகஅளவு ஸ்டார்ச்சி நிறைந்துள்ளதால் செயற்கை இனிப்பு மற்றும் ரசாயனங்கள் என எதுவும் இல்லை. எனவே இதனை பரவலாக அனைவரும் விரும்புகின்றனர். உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்த இதனை உணவாக அளிக்கலாம். ஏனென்றால் இது உடனடி ஆற்றலையும், செரிமான சக்தியையும் அளிக்கும். மேலும் நமது வெப்பமான உடலை குளிர்ச்சி அடைய வைப்பதிலும், இது முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் அளவுக்கு அதிகமாக உடலில் பித்தம் உள்ளவர்களுக்கு, ஜவ்வரிசி கஞ்சிசெய்து கொடுக்கலாம்.
ஜவ்வரிசியில் குறைந்த அளவு கொழுப்புகளுடன் மற்றும் அதிக அளவு கார்போஹைட்ரேட்டும் உள்ளது. மேலும் குறைந்த உடல் எடையை அதிகரிக்க ஜவ்வரிசி ஒரு சிறந்த உணவாகும். நம் இந்தியர்கள் பாலுக்கு அடுத்த படியாக குழந்தைக்கு கொடுக்கப்படும் முதல் வகை உணவாகவும் இதனைபயன்படுத்தி வருகின்றனர். ஜவ்வரிசியில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்குமாம். இது இரத்த நாளங்கள் வழியாக ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை அளித்து இரத்த ஓட்ட மண்டலத்தை ஊக்குவிக்குகிறது. இதையொட்டி இதயத்தில் இரத்த அழுத்தம் குறைக்கப்பட்டு மற்றும் இதயத்தின் சிரமத்தை குறைக்கிறது.
ஜவ்வரிசி தசை வளர்ச்சிக்குத் தேவையான புரதத்தை கொண்டுள்ளது. இது தசையில் சேதமடைந்த செல்கள் மற்றும் திசுக்களின் வளர்ச்சியை சரிசெய்ய பெரிதும் உதவுகிறது மற்றும் செல்களின் தினசரி வளர்ச்சிக்கும் உதவுகிறது. இது தசை வளர்ச்சிக்கு மட்டுமல்லாமால் உடல் வலிமை பெறவும் துணைபுரிகிறது. செரிமானத்தின் தன்மையை மேம்படுத்துகிறது. ஜவ்வரிசியில் நார்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ளன. இது செரிமான ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கிறது. உடலில் வீக்கம், மலச்சிக்கல் மற்றும் வயதுதானவர்களுக்கு அஜீரணம் போன்ற எண்ணற்ற பிரச்சனைகளை தவிர்க்க உதவுகிறது.
ஜவ்வரிசியில் மெக்னீசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளதால், எலும்புகளின் வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. வயதுதானவர்களுக்கு மூட்டுவலி அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. வளரும் குழந்தைகளின் அன்றாட உணவில் ஜவ்வரிசியை அதிகம் சேர்ப்பதால் எலும்புகள் பலப்படுகிறது. ஜவ்வரிசியில் மாவுச்சத்துடன் எளிய சர்க்கரையும் நிறைந்துள்ளதால், அவை உடலில் வளர்ச்சியடை முக்கிய பங்கு வகிக்கிறது. அதிகளவில் குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. விரதம் மேற்கொண்ட பிறகும், உடற்பயிற்சிக்கு பிறகும் சாப்பிடுவதற்கு ஜவ்வரிசி சிறந்த உணவாகும். ஏனெனில் இது நமது உடலை அதிக ஆற்றலுடன் (Energy) வைத்திருக்க உதவுகிறது மற்றும் உடலில் எற்படும் சோர்வு, தலைவலி, தலைச்சுற்றல், ஆகியவற்றைத் தடுக்கிறது.
ஜவ்வரிசியில் உள்ள வைட்டமின்கள் & கலோரிகள் :
Javvarisi Benefits In Tamil : ஒரு கப் ஜவ்வரிசியில் 87 கிராம் கார்போஹைட்ரேட், 544 கிராம் கலோரிகள், 135 கிராம் மாவுச்சத்து, 1.37 கிராம் நார்ச்சத்து, 152 மி.கி மெக்னீசியம், 16.7 மி.கி. பொட்டாசியம், 30.4 மி.கி. கால்சியம் போன்றவை அதிகளவு நிரம்பியுள்ளன.
வைட்டமின்கள், கனிமங்கள், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் குறைந்த அளவில் இதில் காணப்படும். இருப்பினும் பால், காய்கறி மற்றும் கடலைப் பருப்புடன் இதனை சேர்த்து உட்கொண்டால், விட்டுப்போன இந்த அனைத்து ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!