Jawan Movie 1st Day Collection : ஜவான் படத்தின் முதல்நாள் வசூல்
Jawan Movie 1st Day Collection : பாலிவுட் மட்டுமின்றி ஆஸ்திரேலியாவிலும் பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்த முதல் இந்திய படம் என்ற பெருமையை ஜவான் பெற்றுள்ளது.
பாலிவுட் கிங் ஷாருக்கான், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அட்லீ இயக்கத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியான படம் ஜவான் ஆகும். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இப்படம் ஒட்டுமொத்த திரையுலகினரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தது. குறிப்பாக ஷாருக்கானின் பதான் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஜவான் படம் வெளியாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும், பரபரப்பும் அதிகமாக இருந்தது. இப்படத்தில் நடித்தது மட்டுமின்றி படத்தையும் ஷாருக் தயாரித்துள்ளார். இப்படம் ஏற்கனவே சுமார் 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
Jawan Movie 1st Day Collection :
அதேபோல், உலகம் முழுவதும் 10,000 திரையரங்குகளில் முதல் காட்சி திரையிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் தீவிரமாக செய்திருந்தனர். ஆனால், படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால், படத்தின் வசூல் குறித்து கேள்வி எழுந்தது. இந்நிலையில், ஜவான் திரைப்படம் முதல் நாளில் மட்டும் பாக்ஸ் ஆபிஸில் (Jawan Movie 1st Day Collection) உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூலித்துள்ளதாக ஆங்கில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இப்படம் ரூ.75 கோடியும் வசூல் செய்துள்ளதாகவும், உலகம் முழுவதும் ரூ.150 கோடியும் வசூலித்துள்ளது. மேலும் இந்த வசூல் என்பது பாலிவுட் வட்டாரத்தில் இதுவரை எந்த படமும் முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்ததில்லை என்பதால் ஜவான் படத்தின் வசூல் குறித்த பேச்சு ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
(Jawan Movie 1st Day Collection) ஆஸ்திரேலியாவில் AUD 400,000 வசூலித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்த முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் ஜவான் திரைப்படம் பெற்றுள்ளது. பெற்றது. இதனால் படக்குழுவினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.300 கோடி என கூறப்பட்ட நிலையில், முதல் நாள் வசூல் படத்தின் பட்ஜெட்டில் பாதியை வசூலித்துள்ளதால், செலவழித்த பட்ஜெட் முழுவதும் இந்த வார இறுதிக்குள் வசூலிக்கப்பட்டு விடும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. லாபத்தை கணக்கிடுவது படக்குழுவினரின் வேலை என்று குறிப்பிட்டு வருகின்றனர். பாலிவுட் திரையுலகில் அதிக வசூல் செய்த படம் ஷாருக்கானின் பதான். இப்படம் மொத்தம் ரூ.800 கோடி வசூல் செய்தது. இந்நிலையில், ஜவான் படத்தின் முதல் நாள் வசூல் ரூ.150 கோடியைத் தொட்டதால் ஷாருக் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Latest Slideshows
-
Ra-Next Real Estate : ரியல் எஸ்டேட் டிஜிட்டல் கட்டமைப்பு தர முகமையாக ராநெக்ஸ்ட்.. அங்கீகாரம் வழங்கியது டிராய்
-
Weight Loss Tips in Tamil : இயற்கை முறையில் உடல் எடையை குறைக்கும் 10 எளிய வழிகள்?
-
Reduce Body Heat Foods : இயற்கை முறையில் உடல் சூட்டை குறைக்கும் 10 சிறந்த உணவுகள்..!
-
Diabetes Food Chart in Tamil : சர்க்கரை நோயாளிகளுக்கான ஆரோக்கிய உணவு பட்டியல்..!
-
Ayilai Fish Benefits in Tamil : அயிலை மீனின் ஆரோக்கிய இரகசியங்கள்..!
-
Pongal 2026 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & முக்கியத்துவமும்..!
-
Jananayakan Legal Issue : 'ஜனநாயகன்’ படத்துக்கு U/A சான்று வழங்க ஐகோர்ட் உத்தரவு.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு!
-
Parasakthi Review : சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படத்தின் திரை விமர்சனம்..!
-
Raja Saab Movie Review : பிரபாஸின் ‘தி ராஜா சாப்‘ படத்தின் திரை விமர்சனம்..!
-
WPL 2026 : மகளிர் ஐபிஎல் இன்று தொடக்கம்.. முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு மோதல்..!